196 நாட்களுக்கு பிறகு சென்னையில் வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.

வடக்கு வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றத்தழுத்த தாழ்வு நிலையால் சென்னை சென்னை மீனம்பாக்கம், விமான நிலையம், பல்லாவரம், தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில் 200 நாட்களுக்கு பிறகு மழை பெய்து வருகிறது. மழை இல்லாததால்சென்னையில் குடிநீர் தட்டுப்பாடும் அனல் காற்றும் வீசியது. இதனால் சென்னையில் மழை பெய்யாதா என சென்னை வாசிகள் ஏங்கித் தவித்தனர். இப்போது சென்னையில் மழை பெய்து வருவது அவர்களை மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருக்கிறது என்றும் அது போல் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

சென்னையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை மழை பெய்யும் என அறிவித்துள்ளது. மழைக்கு வாய்ப்பு இந்த நிலையில் சென்னை மக்களின் வயிற்றில் பாலை வார்க்கும் வகையில் நாளை முதல் சென்னைக்கு 6 நாட்களுக்கு மழை என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை மாலை 6 மணி முதல் 12 மணி வரை மழை பெய்ய தொடங்கும். 

நார்வேயின் நற்செய்தி அதைத் தொடர்ந்து இந்த மழை மறுநாள் 21-ஆம் தேதி காலை 6 மணி வரை பெய்யும். பின்னர் நண்பகல் 12 மணி வரை வெயில் பின்னர் வானம் மேகமூட்டம் என மாறி மாறி மழையும் வெயிலும் இருக்கும். இப்படியாக சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களில் லேசான மழை பெய்யும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே வேளையில் இது தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் மழையாக இருக்காது என தெரிகிறது.

இந்நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வரும் நாட்களில் வெப்பத்தின் அளவு குறைந்து காணப்படும் என்றும் அவர் கூறினார்.