18 MLA will be eligible for action

கட்சி மாறியதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு 18 எம்எல்ஏக்களும் நீக்கம் செய்யப்ட்டுள்ளதாக சபாநாயர் தனபால் அறிவித்திருப்பது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன், சுப்பிரமணியன், தங்க தமிழ்செல்வன், ஏழுமலை, பார்த்திபன், ஜெயந்தி, பத்மநாபன் , திருப்போரூர் கோதண்டபாணி, முருகன், பாலசுப்பிரமணியன், உமாமகேவரி, கதிர்காமு, ரங்கசாமி உள்ளிட்டோர் நீக்கப்பட்டதாக சபாநாயகர் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது, தங்களுக்கு நம்பிக்கை இல்லை என இந்த 18 எமஎல்ஏக்களும் ஆளுநரிடம் புகார் அளித்ததால், சபாநாயகர் இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

சட்டப்பேரவை விதி எண் 1986-ன் கீழ் இந்திய அரசமைப்பு சட்டம் 10-வது அட்டவனையின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சபாநாயக்ர அலுவலகத்தில் இருந்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

‘விதி எண் 1986 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட விதியாகும். இது, கட்சி மாறுதலுக்காக தகுதி இழப்பாகும்.

18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க அறிவிப்பை சட்டப்பேரவை செயலாளர் பூபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த 18 பேரின் தகுதி நீக்கத்தை எதித்து நிச்சயம் சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்களும் நீதிமன்றத்தை அணுகுவார்கள் என்று கூறப்படுகிறது.

18 பேரை தகுதி நீக்கம் செய்ததன் மூலம் பார்டர் லைன் எனப்படும் 117 என்ற எண்ணிக்கையுடன் ஆட்சியைத் தொடர எடப்பாடி அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.