18 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிப்பு செல்லும் என்று வந்திருக்கிற தீர்ப்பை எங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவாக நாங்கள் கருதவில்லை’என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

 

நீதிபதி சத்தியநாராயணாவின் தீர்ப்பு வந்த சில நிமிடங்களில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த டி.டி.வி.,’கண்டிப்பாக இந்த தீர்ப்பு எங்களுக்கு பின்னடைவு இல்லை. அரசியலில் இதையெல்லாம் எக்ஸ்பீரியன்ஸ் அவ்வளவுதான்.

இந்தத்தீர்ப்பு குறித்து நீதிபதியை விமர்சிக்கும் எண்ணமெல்லாம் எங்களுக்கு கிடையாது. எதிரணியினர் துரோகிகளுக்கு கிடைத்த பரிசு என்கிறார்கள். யார் துரோகி என்பதை ஆர்.கே. நகர் மக்கள் ஏற்கனவே எடுத்துச்சொல்லியிருக்கிறார்கள். அதே பதிலை வரவிருக்கும் இடைத்தேர்தல்களிலும் சொல்வார்கள். 

இந்தத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்தெல்லாம் என் ஆதரவு எம்.எல்.ஏ,க்களை சந்தித்தபிறகே அறிவிக்கமுடியும். மேல்முறையீடு செய்வதா அல்லது நேரடியாக இடைத்தேர்தலை சந்திப்பதா என்பது குறித்து எனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கலந்துபேசிய பிறகே முடிவு செய்யப்படும்.  தீர்ப்பு வந்த பிறகு நான் இன்னும் அவர்களில் யாரையும் சந்திக்கவில்லை’ என்றார்.