பதினெட்டு எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிப்பு செல்லும் என்கிற நீதிபதி சத்தியநாராயணாவின் தீர்ப்புதான் இன்று டெல்லி முதல் தென்காசி வரை பரபரப்பு டாபிக். வடிவேலுவின் வரும்... ஆனா... வராது... ஸ்டைலில் மேல்முறையீடு  செய்வோம்... தேர்தலை சந்திப்போம்... இல்லையெனில் மேல்முறையீடும் செய்துவிட்டு தேர்தலையும் சந்திப்போம் என்று தினகரன் கூடாரம் தாங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி வரும் நிலையில் ஒரு வேளை இடைத்தேர்தல் வந்தால்...?  

மாபெரும் பணமழை கொட்டவிருக்கும் அந்தத்தொகுதிகளின் விபரம் தெரியவேண்டாமா?  இதோ  அந்த லிஸ்ட்... பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம்,  ஆம்பூர்,  பாப்பிரெட்டிபட்டி, அரூர்,  நிலக்கோட்டை,  அரவக்குறிச்சி, தஞ்சாவூர், மானாமதுரை, ஆண்டிபட்டி, பெரியகுளம், சாத்தூர், பரமக்குடி, விளாத்திக்குளம், ஒட்டப்பிடாரம். 

இந்த 18 தொகுதிகள் போக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவாரூர் தொகுதியும், மறைந்த எம்.எல்.ஏ. போஸின் திருப்பரன்குன்றம் தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் காலியாக இருப்பவை 20 தொகுதிகள்.

இந்த தொகுதிகளுக்கு ஒருவேளை கூடிய விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் பரஸ்பரம் யாருக்கு யார் துரோகி என்று நிரூபிக்க இ.பி.எஸ்.,ஓ.பி.எஸ்- தினகரன் அனிகளுக்கிடையே நடக்கும் போட்டியில் 20 ரூபாய் டோக்கன்கள் ரூபத்திலும், இன்னும்  சில புதிய யுக்திகள் மூலமாகவும் பணமழை கொட்டும் என்பது மட்டும் உறுதி.