Asianet News TamilAsianet News Tamil

17-ம் தேதி வெளியாகிறது 18 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பு... புயலைக் கிளப்புமா?

18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் வரும் 17 ஆம் தேதி அன்று இறுதி தீர்ப்பு வெளியாகும் நிலையில் தமிழக அரசியலில் புயலைக் கிளப்புமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

17th will be announced 18 mla's Verdict
Author
Chennai, First Published Sep 8, 2018, 7:25 PM IST

18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் வரும் 17 ஆம் தேதி அன்று இறுதி தீர்ப்பு வெளியாகும் நிலையில் தமிழக அரசியலில் புயலைக் கிளப்புமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலமானதற்குப் பிறகு அதிமுக, சசிகலா அணி, ஓ.பி.எஸ். அணி என்று இரண்டாக பிளவடைந்தது. இதையடுத்து, சசிகலா அணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஈ.பி.எஸ். அணி பிரிந்தது. இதனைத்தொடர்ந்து ஓ.பி.எஸ் அணியும், ஈ.பி.எஸ். அணியும் ஒன்றாக இணைந்தது.

17th will be announced 18 mla's Verdict

சசிகலாவுக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அப்போதைய தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம், கடிதம் அளித்தனர். முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் எனவே அவரை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கடிதத்தில் கூறி இருந்தனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சசிகலா ஆதரவாளர்கள் 18 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடியைத் தூக்கியதை அடுத்து சபாநாயகர் தனபால் அவர்களை தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பினர்களும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

17th will be announced 18 mla's Verdict

இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இதன் இறுதி தீர்ப்பு இம்மாதம் 17 ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது. 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி தப்புமா? அல்லது தமிழக அரசியலில் புயலைக் கிளப்புமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios