ராஜஸ்தான் மாநிலம் பண்டி என்ற இடத்தில்தான் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த மலைவாழ் சிறுமி ஒருவர் தனது நண்பர்களுடன் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி மாடு மேய்க்க சென்றார்.

மாடு மேய்க்க சென்ற சிறுமியை அடித்து கொன்று அந்த சிறுமியின் சடலத்துடன் 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமியின் பெண்ணுறுப்பில் 30க்கும் மேற்பட்ட காயங்கள் இருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. 

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக உத்தரப் பிரதேசம் பஞ்சாப், ராஜஸ்தான், பீகார் போன்ற மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காதலிக்க மறுக்கும் பெண்களின் முகத்தில் ஆசிட் வீசுவது, கலப்புத் திருமணம் செய்து கொண்ட பெண்களை அடித்து கொடுமைப்படுத்துவது, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்து கழட்டி விடுவது, திருமணம் செய்து கொண்டு பின்னர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வது என எண்ணற்ற கொடுமைகள் பெண்களுக்கு எதிராக அரங்கேறி வருகிறது. இதை தடுக்க அரசும் காவல்துறையும் எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.

நாட்டில் நடந்து வரும் பாலியல் கொடுமைகளால் இந்தியாவின் மானம் சர்வதேச அளவில் கப்பலேறி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் தங்களது நாட்டு பிரஜைகள் குறிப்பாக பெண்கள் இந்தியா போன்ற நாடுகளுக்கு சுற்றுலா வர வேண்டாம் என எச்சரிக்கும் அளவிற்கு இங்கே பெண்களின் பாதுகாப்பு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில் 16 வயது சிறுமியை அடித்துக்கொன்று சடலத்துடன் வன்புணர்வு செய்த கொடூரம் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பண்டி என்ற இடத்தில்தான் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த மலைவாழ் சிறுமி ஒருவர் தனது நண்பர்களுடன் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி மாடு மேய்க்க சென்றார்.

பின்னர் அந்த சிறுமி வீடு திரும்பவில்லை, அதனைத்தொடர்ந்து அவரது பெற்றோர்கள் அந்த சிறுமியை தேடி வந்தனர். பின்னர் அந்தச் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். அது அந்த ஒட்டு மொத்த கிராமத்தையும் அதிர்ச்சி அடைய வைத்தது. மகளின் இறப்புக்கான காரணம் என்ன என்று தெரியாமல் பெற்றோர்கள் கதறினர். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் குறைந்தது 3 பேர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கக்கூடும் என்றும், அந்த சிறுமியின் அந்தரங்க உறுப்பில் 30க்கும் மேற்பட்ட காயங்கள் இருப்பதாகவும், அந்தச் சிறுமியின் உடல் முழுவதும் கீறல்கள் காயங்கள் இருப்பதால் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சிறுமி கையை துப்பட்டாவால் கட்டி துன்புறுத்தப்பட்டிருப்பதாகவும், உயிருக்கு போராடிய அந்த சிறுமியை கொன்று பின்னர் பாலியல் வன்புணர்வு செய்திருக்க கூடும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார் பண்டி எஸ். பி ஜெய் யாதவ், மிகக் கொடூரமான முறையில் இந்த சம்பவம் நடந்துள்ளது, இதுபோன்ற மோசமான ஒரு சம்பவத்தை எனது வாழ்நாளில் நான் பார்த்ததில்லை, நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என அவர் கூறியுள்ளார்.