Asianet News TamilAsianet News Tamil

ஆர்.பி உதயகுமார் தாரைவார்த்த 1575 கோடி மதிப்புள்ள அரசு நிலம்.. கட்டுமானப்பணி ஜரூர்.. பகீர் தகவல்.?

சென்னை கோயம்பேடு அருகே அரசுக்கு சொந்தமான ரூபாய் 1,575 கோடி மதிப்பிலான 10.5 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு எந்தவித சட்டதிட்டங்களையும் பின்பற்றாமல் தாரைவார்த்ததாக முன்னாள் அமைச்சர் ஆர். பி உதயகுமார் மீது கடந்த 2021 ஏப்ரல் மாதம் தலைமை செயலாளரிடம் மருது சேனை சங்கத் தலைவர் ஆதிநாராயணன் புகார் மனு அளித்தார். அரசு நிலத்தை மோசடி செய்த ஆர்.பி உதயகுமார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்போது அவர் கேட்டுக் கொண்டார். 

1575 crore worth of government land sold by ex minister RP Udayakumar .. commenced construction ..
Author
Chennai, First Published Aug 11, 2021, 4:00 PM IST

முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விதிமுறைகளை மீறி கூவம் ஆற்றங்கரையில் அரசுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை பாஷ்யம் கன்ஸ்ட்ரக்சன் என்ற தனியார் கட்டுமான நிறுவனத்திக்கு வழங்கியதாக புகார் எழுந்த நிலையில், தற்போது அந்த இடத்தில் அந்நிறுவனம் அடுக்கு மாடி குடியிருப்புக்கான கட்டுமானப் பணிகளை தொடங்கியிருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதேபோல் கூவக் கரையில் வசித்த குடிசைவாசிகளை அரசாங்கம் வெளியேற்றியுள்ள நிலையில், பாஷ்யம் நிறுவனம் அங்கு கட்டுமானப் பணிகளைத் தொடங்கியுள்ளது. 

சென்னை கோயம்பேடு அருகே அரசுக்கு சொந்தமான ரூபாய் 1,575 கோடி மதிப்பிலான 10.5 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு எந்தவித சட்டதிட்டங்களையும் பின்பற்றாமல் தாரைவார்த்ததாக முன்னாள் அமைச்சர் ஆர். பி உதயகுமார் மீது கடந்த 2021 ஏப்ரல் மாதம் தலைமை செயலாளரிடம் மருது சேனை சங்கத் தலைவர் ஆதிநாராயணன் புகார் மனு அளித்தார். அரசு நிலத்தை மோசடி செய்த ஆர்.பி உதயகுமார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்போது அவர் கேட்டுக் கொண்டார்.  

1575 crore worth of government land sold by ex minister RP Udayakumar .. commenced construction ..

அதாவது, வருவாய்த்துறையை அரசாங்கத்தின் முதுகெலும்பு என்றே சொல்லலாம், ஒரு அரசு தங்குதடையின்றி இயங்குவதற்கான பொருளாதாரத்தை ஈட்டி தருவதே இந்த துறைதான் என்பதே அதற்கு காரணம். அப்படிப்பட்ட துறைக்கு கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தவர்தான் ஆர்.பி உதயகுமார். இவர் அமைச்சராக இருந்தபோது இவர் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்தன. ஆனால் அது குறித்து இவர் மீது அப்போது  எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  

அதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் அவர் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டு எழுந்தது, அதாவது, சென்னை கோயம்பேடு அருகே அரசாங்கத்துக்கு சொந்தமான சுமார் 10 ஏக்கர் நிலத்தை பாஷ்யம் என்ற தனியார் நிறுவனத்திற்கு சட்டவிதி முறைகளை மீறி தாரைவார்த்தார் என்பதே அந்த புகார். மருது சேனை கட்சியைச் சார்ந்த ஆதிநாராயணன் அப்போது தலைமைச்செயலாளர் இடத்தில் புகார் மனு ஒன்று கொடுத்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், வருவாய்த் துறையில் மிக அதிகபட்ச சட்டவிதி மீறலும், அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளது. அத்துறையின் அமைச்சர் ஆர். பி உதயகுமார் அரசுக்கு சொந்தமான சுமார் 10.5 ஏக்கர் நிலத்தை பாஷ்யம் என்ற தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்த்தார். அது அரசு நிலம் என்பதால் அதை தனியாருக்கு விற்க முடியாது, அதை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மருத்துவமனை கட்டுவது, பள்ளிக்கூடம் அமைப்பது போன்றவற்றிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். 

1575 crore worth of government land sold by ex minister RP Udayakumar .. commenced construction ..

ஆனால் அது எல்லாம் தெரிந்திருந்தும், வருவாய்த்துறை அமைச்சர் ஆர.பி உதயகுமார் தனது பினாமி கம்பெனிகளில் ஒன்றான பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்திற்கு வணிக நோக்கத்திற்காக அந்த இடத்தை தாரைவார்த்துள்ளார். அந்த 10.5 ஏக்கர் நிலத்தில் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் அங்கு  அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட உள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் கட்டப்படும் ஒரு பிளாட்டின் விலை ஒன்னரை கோடியிலிருந்து 2 கோடி ரூபாய் வரையில் விற்கப்பட உள்ளது. அதுபோல மொத்தம் 2500 பிளாட்டுகள் அங்கு கட்டப்பட உள்ளது. ஆனால் கமிஷன் அடிப்படையில் மிகக் குறைந்த விலைக்கு அந்த நிலம் தாரைவார்க்கப்பட்டுள்ளது. தான் அமைச்சர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி வருவாய்த்துறையின் மூலம் ஒரு அவசரஅவசரமாக அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. 8-2- 2021 அன்று  அந்த அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது, ஆனால் அந்த கட்டுமான நிறுவனம் அந்த இடத்தை கேட்டு விண்ணப்பம் செய்ததே 1-12-2020-ல்தான் வெறும் 68 நாட்களில், பாஸ்யம் கன்ஸ்ட்ரக்ஷனுக்காக நிலத்தை ஆர்ஜிதப்படுத்த அனைத்து அதிகாரிகளும் அவசர அவசரமாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளனர். இது மிகப்பெரிய சட்ட விதிமீறல்,  

1575 crore worth of government land sold by ex minister RP Udayakumar .. commenced construction ..

இது வெறும் ஆரம்பம் தான், சென்னையில் பாஷ்யம் நிறுவனத்தை போல பலநூறு நிறுவனங்கள் உள்ளன. அது போன்ற நிறுவனங்களுக்கு எல்லாம் விதிமீறல் செய்து நிலங்களை வழங்கி கடந்த 10 ஆண்டுகளாக ஆர்.பி உதயகுமார் போன்றோர் சொத்து சேர்த்துள்ளனர் அதற்கு இது மிகப்பெரிய ஒரு உதாரணம், இது போன்ற ஊழல் வருவாய் துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் நடந்துள்ளது. கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி அவசரகதியில் அரசாணைகளை வெளியிட்டு, அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடந்திருக்கிறது. இதுகுறித்து தலைமைச் செயலாளரிடத்தில் புகார் கொடுத்துள்ளோம், இந்த புகார் மீது அவர் நடவடிக்கை எடுத்தால் பார்ப்போம், இல்லை என்றால் நாங்கள் இந்த வழக்கை  நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வோம். இந்த ஆட்சியில் விட்டாலும் அடுத்து வரும் ஆட்சி இவர்களை சும்மா விடாது என்று அவர் கூறியிருந்தார். 

1575 crore worth of government land sold by ex minister RP Udayakumar .. commenced construction ..

இந்நிலையில் அங்கு வசித்துவந்த குடிசைவாழ் மக்களை அப்புறப்படுத்தி, ஆர்ஜிதப்படுத்தப்பட்ட நிலத்தில், திட்டமிட்டபடியே அந்த தனியார் நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்பை கட்டுவதற்கான கட்டுமான பணிகளை துவங்கி உள்ளது. இதில் அரசு உடனே தலையிடுமா, நில பரிமாற்றத்தில் நடந்துள்ள முறைகேடுகள் விசாரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 
Follow Us:
Download App:
  • android
  • ios