அதிமுக (பன்னீர்செல்வம் – சசிகலா) இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது. நீயா? நானா? என்ற ரீதியில் போட்டி போட்டு கொண்டு எம்.எல்.ஏக்களை இழுக்கும் பணிகள் திரைமறைவில் குதிரை வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஓ.பி.எஸ்க்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே ஓ.பி.எஸ் வுடன் 5 எம்.எல்.ஏக்கள் இணைந்துவிட்ட நிலையில், சசிகலா சிறைவசம் உள்ள எம்.எல்.ஏக்களை நட்சத்திர ஓட்டலில் தங்கவைத்து பயங்கர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பாதுகாத்து வருகின்றனர்.

எம்.எல்.ஏக்கள் இங்கேயே இருந்தால் ஓ.பி.எஸ்வுடன் இணைய வாய்ப்பு உள்ளதாக சசிகலா தரப்பு கதிகலங்கி உள்ளது.

எனவே எம்.எல்.ஏக்கள் அனைவரையும் டெல்லி அனுப்புவதற்கு ஏதுவாக 150 விமான டிக்கெட் தயார் நிலையில் இருப்பதாக சசிகலா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.