'தடி எடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள்' என்பது போல் மக்களின் உயிரோடு நாள் தோறும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ‘’சென்னையில் கொரோனா பரிசோதனைக்குச் சென்றாலே, சோதனை செய்துகொள்கிறவரும் அவரது குடும்பத்தினரும்  14 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள் என்ற மாநகராட்சி ஆணையரின் திடீர் அறிவிப்பு, மக்களை மேலும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா தடுப்புப்பணிகளில் ஆட்சியாளர்கள் ஆளுக்கொன்றாக பேசியும், செயல்பட்டும், அவரவர் இஷ்டப்படி அறிவிப்புகளை வெளியிட்டும் கொரோனாவை விட மோசமாக மக்களை இம்சித்து வருகிறார்கள். 'தடி எடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள்' என்பது போல் மக்களின் உயிரோடு நாள் தோறும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

திறமையும் அனுபவமும் வாய்ந்த அமைச்சர் அல்லது அதிகாரி தலைமையில், துடிப்பான அதிகாரிகள் குழுவினர் ஒற்றை உத்தரவுக்கு கட்டுப்பட்டு, ஒருங்கிணைந்து செயல்பட்டால்தானே மிக மோசமான பேரிடரை எதிர்கொள்ள முடியும்?’’என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.