Asianet News TamilAsianet News Tamil

அடேங்கப்பா 131 சதவீதம் சொத்துக்குவிப்பு... மாஜி முதல்வர் ஈபிஎஸ் ஆதரவாளர் இளங்கோவன் சிக்கியது எப்படி.?

சேலத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளரான இளங்கோவன் சிக்கியது பற்றி புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

131 per cent assets ... How did former Chief Minister EPS supporter Ilangovan get caught?
Author
Salem, First Published Oct 22, 2021, 9:27 AM IST

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வலது கரமாக செயல்படுபவர் என அறியப்படுபவர் தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன். இவருக்கு சொந்தமான 27 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸாரின் பார்வை பதிந்தது பற்றி புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. 
தற்போது இளங்கோவன் சேலத்தில் மாளிகையை போன்ற பிரம்மாண்டமான வீடு ஒன்றை கட்டி வருகிறார். அந்த மாளிகையைப் பற்றி லஞ்ச ஒழிப்புப் போலீஸார் ரகசியமாக விசாரித்து வந்திருக்கிறார்கள். இதில்தான் இளங்கோவன் வசமாக சிக்கிக் கொண்டார் என்கிறது லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள். அதுமட்டுமல்ல, இவருடைய சொத்துகள், வருமானம், தொழில் என பலவற்றைப் பற்றியும் போலீஸார் துருவித் துருவி விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அதுதொடர்பாக திரட்டப்பட்ட தகவலில் வருமானத்துக்கு அதிகமாக 131 சதவீதம் சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை கணக்கிட்டுள்ளது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

131 per cent assets ... How did former Chief Minister EPS supporter Ilangovan get caught?
எப்.ஐ.ஆரில், இளங்கோவன் 2014 - 2020 காலத்தில் பதவியில் இருந்தபோது அதிகாரத்தை பயன்படுத்தி தன்னுடைய பெயரிலும் மகன் பெயரிலும் சொத்துக்களை குவித்துள்ளதாக எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2014-இல் இளங்கோவனின் சொத்து மதிப்பு ரூ.30 லட்சமாக இருந்த நிலையில், 2020-ஆம் ஆண்டில் ரூ. 5.6 கோடியாக அதிகரித்திருக்கிறது. ஆனால், அவருடைய மாத வருமானத்தை வைத்து பார்த்தால் சொத்து மதிப்பு ரூ. 2.88 கோடி மட்டுமே இருந்திருக்க வேண்டும். எனவே, பதவியில் இருந்த காலத்தில் ரூ. 5.30 கோடி சொத்து சேர்த்துள்ளார் என்றும் இது வருமானத்துக்கு அதிகமாக 131 சதவீதம் அதிகம் என்றும் லஞ்ச ஒழிப்புத் துறை எப்ஐஆரில் குறிப்பிட்டுள்ளது. 
வருமானத்துக்கு அதிகமாக 131 சதவீத சொத்துக் குவிப்புக்கு மத்தியில் மாளிகை வீடும் சேர்ந்துகொண்டதால், லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் பார்வை அவர் மீது வலுவாகக் குவிந்ததாகச் சொல்லப்படுகிறது. அதன் விளைவு, இளங்கோவன் தொடர்புடைய 27 இடங்களில் தற்போது சோதனைகள் நடைபெற்று வருகின்றன. 

Follow Us:
Download App:
  • android
  • ios