Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவில் 13 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்.!! அதிர்ச்சி தகவலை வெளியிட்டது ஆய்வு நிறுவனம்.!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக 1 லட்சம் கோடி டாலர் வாய்ப்பை இந்தியா இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.அதனை சரி செய்ய 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார தொலைநோக்கு திட்டத்துக்கு இப்போது புரட்சிகர பொருளாதார அணுகுமுறை தேவைப்படுகிறது.

13 crore people in India risk losing their jobs Survey reveals shocking news !!
Author
India, First Published May 18, 2020, 8:00 PM IST

கொரோனா பாதிப்பு காரணமாக உலக நாடுகளில் பொருளாதாரம் வேலைவாய்ப்பு முடங்கியுள்ளது. இதே நிலைஇந்தியாவிலும் தலைதூக்கியிருக்கிறது.இந்தியாவில் 13.5கோடி பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக ஆய்வு நிறுவனம் ஒன்று அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

13 crore people in India risk losing their jobs Survey reveals shocking news !!

 இது தொடர்பாக சர்வதேச மேலாண்மை ஆலோசனை நிறுவனமான ஆர்தர் டி லிட்டில், 'இ13 crore people in India risk losing their jobs Survey reveals shocking news !!

இந்தியா: கொரோனா வைரஸ் பாதிப்பு உருவாக்கும் பொருளாதார சவால்களை சமாளித்தல்' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் சில முக்கியமான கருத்துக்கள் மட்டும்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக 1 லட்சம் கோடி டாலர் வாய்ப்பை இந்தியா இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.அதனை சரி செய்ய 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார தொலைநோக்கு திட்டத்துக்கு இப்போது புரட்சிகர பொருளாதார அணுகுமுறை தேவைப்படுகிறது. உடனடி ஊக்குவிப்பு சலுகைகள், அமைப்பு ரீதியிலான சீர்திருத்தங்களை மையமாக வைத்து இதை அணுக வேண்டும்.

13 crore people in India risk losing their jobs Survey reveals shocking news !!

இதற்கு நல்ல தொடக்கமாக பிரதமர் மோடி அறிவித்துள்ள சுய சார்பு கொள்கை அமைந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் தனி நபர் வருவாய் குறையும். 13.5 கோடி பேருக்கு வேலையிழப்பு ஏற்படும்.12 கோடி பேர் வறுமையில் சிக்குவார்கள். ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் சரியும். எனவே நலிவுற்ற பிரிவினருக்கும், சிறுகுறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு தரும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios