122 mla are bonnded labours
நீட்டிய இடத்தில் கையெழுதுப் போட்டோம்..அவங்க என்ன சொன்னாலும் தலையாட்டினோம்…122 எம்எல்ஏக்களும் இப்ப கொத்தடிமைகள் தான் என சூலூர் எம்எல்ஏ கொளுத்திப் போட்டுள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலையில் ஆட்சிக்கும், கட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. என்றும், எடப்பாடி அரசின் கவனக்குறைவே இதற்கு காரணம் என்றும் தெரிவித்தார்.
எடப்பாடி அணியுடன் இணைவதற்கு ஓபிஎஸ் ஆர்வமாக உள்ளார் ஆனால் ஓபிஎஸ்சுடன் இருக்கும் பதவியில் இல்லாத சில முன்னாள் எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் தான் , இரு அணியும் இணைவதற்கு பெரிய தடையாக உள்ளனர் என கனகராஜ் கூறினார்.
சசிகலாவையும், தினகரனையும் எடப்பாடி அணியினர் அனைவரும் கும்பிட்டார்கள். சசிகலாவை முதலமைச்சராக்க வேண்டும் என்று எந்த எம்எல்ஏவும் சொன்னதில்லை, அதே போல் தற்போது அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேபோல் டி.டி.வி. தினகரனுக்கு ஆர்.கே. நகர் தொகுதியில் சீட் தருவதற்கும் எம்எல்ஏக்களிம் கேட்கவில்லை என்று கூறிய கனகராஜ் . 122 எம்எல்ஏக்களில் நானும் ஒருவனாக உட்கார்ந்திருந்தேன். எல்லாவற்றும் கையெழுத்து போட சொன்னார்கள், போட்டோம். இப்போது எடப்பாடி அணி சசிகலாவையும், தினகரனையும் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்கிறார்கள் என விரக்தியாக தெரிவித்தார்.
அவர்களை ஏன் கட்சியில் சேர்த்தீர்கள்; இப்பொழுது ஏன் நீக்குகிறீர்கள்' என்று எங்களைக் கேட்டால் அதற்கு சரியான பதில் அளிப்போம், ஆனால் எங்களிடம் எதுவும் கேட்பதில்லை என கூறினார்.
அவரவர்களுக்கு சாதகமாக ஒரு குரூப் செயல்படுகிறது. 122 எம்.எல்.ஏ.க்களும் வேறு வழியில்லாமல் அவர்களுக்கு கொத்தடிமைகளாக இருக்கும் சூழ்நிலை தான் உள்ளது என கனகராஜ் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டார்.
