Asianet News TamilAsianet News Tamil

10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு... அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி..!

ஜூன் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

10th public exam schedule release...Minister Sengottaiyan
Author
Tamil Nadu, First Published May 12, 2020, 11:11 AM IST

ஜூன் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்;- ஜூன் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்.  மார்ச் 26ம் தேதி நடைபெற இருந்த 11-ம் வகுப்பு கடைசி தேர்வு ஜூன் 2ம் தேதி நடைபெறும். அதேபோல், 12ம் வகுப்பு தேர்வை மார்ச் 24ம் தேதி எழுதாத மாணவர்கள் ஜூன் 4ம் தேதி எழுதலாம் என தகவல் தெரிவித்துள்ளார். 

10th public exam schedule release...Minister Sengottaiyan

12ம் வகுப்பு மதிப்பெண் திருத்தம் மே 27ம் தேதி முதல் தொடங்க உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பேருந்து வசதி செய்து தரப்படும். மாணவர்களுக்கு தேவையான சுகாதார வசதிகள் செய்து தரப்படும். மாணவர்களுக்கு இடையே சமூக இடைவெளி முறையாக கடைப்பிடிக்கப்படும். பள்ளிகள் திறப்பு குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தேர்வுகளை நடத்துவதில் மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. 

10ம் வகுப்பு தேர்வு அட்டவணை விவரம் வெளியீடு

ஜூன் 1ம் தேதி மொழிப்பாடம்

ஜூன் 3ம் தேதி ஆங்கிலப் பாடம்

ஜூன் 5ம் தேதி கணிதப் பாடம்

ஜூன் 6ம் தேதி  விருப்ப மொழி பாடம்

ஜூன் 8ம் தேதி  அறிவியல்  பாடம்

ஜூன் 10ம் தேதி  சமூக அறிவியல்  பாடம்

ஜூன் 12ம் தேதி தொழிற்  பாடம்

11ம் வகுப்பு மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள தேர்வு ஜூன் 2ம் தேதி முதல் நடைபெறும் 12ம் வகுப்புக்கான வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் பாடங்களுக்கு ஜூன் 4ல் தேர்வு நடைபெறும் என தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios