இந்த ஆண்டு மட்டும் 5 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார் என  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

இந்த ஆண்டு மட்டும் 5 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்த ஒரே ஆண்டில் 37 கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறது. தேர்தல் நேரங்களில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் துரிதமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது, அதில் மிக முக்கியமான திட்டம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் ஆகும். ஆனால் இதுவரை அதற்கான அறிவிப்புகள் எதுவும் இல்லை, விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் பள்ளி முடித்து விட்டு கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என கடந்த சில மாநங்களுக்கு முன்னர் அரசு அறிவித்துள்ளது. அந்த திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன், பள்ளி முடித்து விட்டு இளங்கலையில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்க திட்டம் இந்த ஆண்டு முதல் தொடங்கப்படும், இந்த ஆண்டு மட்டும் 5 லட்சம் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் விரைவில் துவங்க உள்ளார் என்றார். இந்த தகவல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தொடர்ந்து பேசிய அவர் நாளை காலை 12 முதல் 13 கிலோ மீட்டர் தூரம் ஓடப் போவதாகவும், அப்போது அம்பேத்கர் கல்லூரி மாணவர்கள் யாராக இருந்தாலும் தன்னுடன் வரலாம் என்றும், நான் உங்களுடன் ஓட காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

உடற்பயிற்சி குறித்து என்னுடைய இலக்கு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் ஓடி என் கால் தடத்தை பதிக்க வேண்டும் என்பதுதான் என்ற அவர், வரும் காலங்களில் நாம் நல்ல திடத்துடன் தான் கடந்து செல்ல வேண்டும் என அவர் கூறினார். அதற்கு நல்ல உடற்பயிற்சி வேண்டுமென்றார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின்பு அவரின் அறிவிப்பின் பேரில் தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்காக ஆயிரம் கோடி ரூபாய் இந்த ஆட்சியில் மட்டும்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் முதற்கட்டமாக 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த ஒரே ஆண்டில் 31 கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளது இந்த ஆட்சியில்தான் என அவர் பெருமிதம் தெரிவித்தார். ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியின் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழாவில் கலந்து கொண்ட மா. சுப்பிரமணியன் இவ்வாறு கூறினார்.