Asianet News TamilAsianet News Tamil

100 வயதை கடந்த தமிழர்.. சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது.. தமிழக அரசு அறிவிப்பு.

இந்த விருதிற்காக விருதை தேர்வு செய்திட, ஒரு குழுவை அமைக்கவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே ஆணையிட்டு இருந்தார்கள்

.

100 years of age .. Thakaisal Tamil award for freedom fighter Tiyagi Sankarayya .. Government of Tamil Nadu announcement.
Author
Chennai, First Published Jul 28, 2021, 2:08 PM IST

தகைசால் தமிழர் விருதுக்கு முதுபெரும் தலைவர் திரு என் சங்கரையா அவர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களால் அந்த விருது அவருக்கு வழங்கப்படும் என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் அரசு செய்தி வெளியிட்டுள்ளது. அதன் முழு விவரம் பின்வருமாறு;  தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கு, மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் தகைசால் தமிழர் என்ற பெயரில் புதிய விருதை உருவாக்கவும்.

இந்த விருதிற்காக விருதை தேர்வு செய்திட, ஒரு குழுவை அமைக்கவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே ஆணையிட்டு இருந்தார்கள். இவ் விருதுக்கான விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்து ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, மாணவர் தலைவராகவும், சுதந்திர போராளியாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும், அரும்பணியாற்றியதுடன்,  தமிழ்நாட்டிற்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர். சமீபத்தில் 100 வயதை அடைந்த தமிழர், 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு. என் சங்கரையா அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் இவ்வாண்டிற்கான தகைசால் தமிழர் விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு, அவருக்கு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டது. தகைசால் தமிழர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. என் சங்கரையா, அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் பாராட்டுச் சான்றிதழும், வருகிற ஆகஸ்ட் திங்கள் 15ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களால் வழங்கப்படும். என அதில் கூறப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios