100 days of Yogi Adityanath Nobody feels safe in UP says Congress

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வௌியிட்டது 100 நாள் சாதனை புத்தகமல்ல, அது பொய்களின் தொக்கான தொகுப்பு என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

100நாள் சாதனை

உத்தரப்பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பு ஏற்று 100நாட்களை நிறைவு செய்துள்ளார். இந்த 100 நாட்களில் அவர் ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகள், திட்டங்கள், அறிவிப்புகள் குறித்து புத்தகமாக அச்சடித்து வௌியிட்டுள்ளார்.

தாக்கு

இது குறித்து மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் சத்யதேவ் திரிபாதி மற்றும் செய்தித்தொடர்பாளர் அகிலேஷ் பிரதாப் சிங் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது-

எதுவும் நிறைவேறவில்லை

யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பு ஏற்றபின் மாநிலத்தில் குற்ற எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. அனைத்து குற்றவாளிகளையும் சிறையில் தள்ளுவேன் என்று உறுதியளித்தார், இப்போது அரசின் செயல்பாடுகள் சிரிக்கும் வகையில் இருக்கிறது. ஜூன் 15-ந் தேதிக்குள் சாலைகள் செப்பணிடப்படும் என்று கூறினார் அதுவும் நிறைவேற்றப்படவில்லை.

பொய்களின் தொகுப்பு

இதைக்காட்டிலும் விவசாயிகளிடம் இருந்து உருளைக்கிழங்கு குவிண்டால் ஒன்று ரூ.487க்கு வாங்கப்படும் என்று கூறியதும் தோல்வி அடைந்துவிட்டது.

மேலும், தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணக் குறைப்பு, மாணவர்களுக்கு இலவசலேப்டாப், 24 மணிநேரம் மின்சார சப்ளை, அனைவருக்கும் மின்சாரம், ஆன்ட்டிரோமியோ படை, பெண்கள் பாதுகாப்பு, கிராமப்புற வேலைவாய்ப்பு, நிலம் பறிக்கும்மாபியாக்கள், கோமதி ஆற்றை சுத்தப்படுத்துதல் ஆகிய திட்டங்கள் அனைத்தும் கேலிக்கூத்தாக இருக்கிறது. முதல்வர் யோகி வௌியிட்டது 100 நாள் சாதனை புத்தகமல்ல, அது பொய்களின் கொத்தான தொகுப்பு’’ என்று தெரிவித்தார்.

சொத்துக்களை தெரிவிக்கவில்லை

செய்தித்தொடர்பாளர் பிரதாப் சிங் கூறுகையில், “ அமைச்சர்கள் அனைவரும் சொத்துப்பட்டியலை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். ஆனால், இதுவரை பாதிக்குமேற்பட்ட அமைச்சர்கள் ஒருவர்கூட சொத்துப்பட்டியலைவௌியிடவில்லை’’ என்றார்.