கடந்த 100 நாட்களில் நாடு டிரைலரை மட்டுமே பார்த்துள்ளது... முழுப்படமும் இனிமேல்தான் பார்க்கப்போகிறது என பிரதமர் மோடி பஞ்ச் டயலாக் பேசியுள்ளார்.

 
 
ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, ’’கடந்த 100 நாட்களில் நாடு டிரைலரை மட்டுமே பார்த்தது, முழுப் படமும்  இனிமேல்தான் காட்டப்பட உள்ளது. ஏழை மக்களின் பணத்தை சூறையாடியவர்களை சரியான இடத்திற்கு அனுப்புவதே எனது அரசாங்கத்தின் உறுதிப்பாடு. சிலர் ஏற்கனவே அங்கு சென்று விட்டனர். கடந்த 100 நாட்களில் நாடு டிரைலரை மட்டுமே பார்த்து உள்ளது.  அதே நேரத்தில் முழு படமும் இனிமேல் தான் காட்டப்பட  உள்ளது.

தாங்கள் நாட்டிற்கு மேலானவர்கள் என்று நினைத்தவர்கள் தற்போது நீதிமன்றங்களைச் சுற்றிவருகிறார்கள். இன்று நாடு ஒருபோதும் காணாத வேகத்துடன் முன்னேறி வருகிறது’’ என அவர் தெரிவித்தார். பேட்ட படத்தில் நடிகர் ரஜினிகாந்த், இது வெறும்  ட்ரெய்லர் தான்... மெயின் பிக்சரை இனிமேல் தான் பார்க்கப்போறீங்க என்கிற பஞ்ச் டயலாக்கை மோடி பயன்படுத்தி உள்ளதாக பலரும் கருதுகின்றனர்.