Asianet News TamilAsianet News Tamil

சசிகலாவிற்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.. அதிர்ச்சியில் சின்னம்மா.

சசிகலாவிற்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறையினர் முடக்கி உள்ளனர். சொத்துகுவிப்பு வழக்கில் சிக்கிய சசிகலாவின் மேலும் 100 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கி உள்ளனர்.

100 crore worth of assets belonging to Sasikala frozen ..  Chinnamma shocking.
Author
Chennai, First Published Sep 8, 2021, 2:59 PM IST

சொத்துகுவிப்பு வழக்கில் சிக்கிய சசிகலாவின் மேலும் 100 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கி உள்ளனர். சொத்துகுவிப்பில் ஈடுபட்டதாக சசிகலாவை வருமான வரித்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல கோடி மதிப்பிலான சொத்துக்களை சசிகலா பினாமி பெயரில் வாங்கி குவித்தது தெரியவந்தது.

இதனையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பல கோடி ரூபாயை முறைகேடாக மாற்றி பினாமி பெயரில் 1600 கோடி ரூபாய் வரை சொத்துகள் வாங்கி குவித்தது தெரியவந்தது. பல கோடி வரி ஏய்ப்பு செய்ததும் தெரியவந்தது. சென்னையில் உள்ள ஜாஸ் சினிமாஸ்,ஸ்பெக்ட்ரம் மால், கங்கா சினிமாஸ் உட்பட 10 நிறுவனங்கள்  பினாமி பெயரில் வாங்கப்பட்டது தெரியவந்ததையடுத்து சுமார் 1600 கோடி ரூபாய் சொத்துகளை வருமான வரித்துறையினர் முடக்கினர். 

100 crore worth of assets belonging to Sasikala frozen ..  Chinnamma shocking.

இதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் 2003 மற்றும் 2005 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 65 நிறுவனங்கள் முறைக்கேடாக வாங்கப்பட்டது தெரியவந்தது. இதனடிப்படையில் பினாமி பெயரில் வாங்கப்பட்ட ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீ ஹரிசந்தனா எஸ்டேட்ஸ்,  சென்னை போயஸ் கார்டனில் உள்ள 10 கிரவுண்ட் நிலம் என மொத்தம் 300 கோடி ரூபாய் சொத்துகளை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டு பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறையினர் முடக்கினர். இந்த நிலையில் மேலும் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பங்களாவை வருமான வரித்துறையினர் முடக்கி உள்ளனர்.  செங்கல்பட்டு மாவட்டம் பையனூர் பகுதியில் 49 ஏக்கரில் அமைந்துள்ள  100 கோடி பங்களாவை வருமான வரித்துறையினர் முடக்கி உள்ளனர். 

100 crore worth of assets belonging to Sasikala frozen ..  Chinnamma shocking.

பங்களாவில் முடக்கப்பட்டதற்கான 10 பக்கங்கள் கொண்ட நோட்டீஸை வருமான வரித்துறையினர் ஒட்டி சென்றனர்.  இதுவரை சசிகலாவிற்கு சொந்தமான 2000 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறையினர் முடக்கி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.மேலும் விசாரணை யானது நடந்து வருவதாகவும்  வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.மேலும் தற்போது முடக்கப்பட்டுள்ள நிலம் தன்னிடம் இருந்து மிரட்டி வாங்கப்பட்டதாக இசையமைப்பாளர் கங்கை அமரன் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios