தமிழக பட்ஜெட்டில் மக்களுக்கு பயனுள்ள பல புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.  2020 - 2021 ஆம் நிதியாண்டிற்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல்  செய்துவருகிறார் . அதில் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-  முதல்வரின் பசுமை வீடு திட்டம் மூலம் கட்டப்படும் வீடு ஒன்றிற்கு கட்டுமான செலவு ரூபாய் 2.5 லட்சமாக  உயர்த்தப்பட்டுள்ளது .

 

அதேபோல ஏழை எளிய மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும்  அம்மா உணவக திட்டத்திற்கு கூடுதலாக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.   கூடுதலாக  அம்மா உணவகங்கள் திறக்கப்படும் எனவும் பட்ஜெட்டில்  துணை முதலமைச்சர் அறிவித்துள்ளார் . அதேபோல் ஏழை குடும்பங்களுக்கு எல்ஐசியுடன் கூடிய விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .பெண்களின் பாதுகாப்பை மையமாகக்கொண்டு  நிர்பயா நிதி மூலம்  பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் எனவும் அதற்காக  75.02 கோடி நிதி ஒதுக்கியும் துணை முதலமைச்சர்  அறிவித்துள்ளார்.   அதேபோல் விபத்தில் நிரந்தரமான ஊனம் ஏற்பட்டால்  இரண்டு லட்சம் வரை இழப்பீடு அளிக்கப்படும் .

விபத்து உள்ளிட்டவற்றில் சிக்கி அகால மரணம் அடைபவருக்கு இழப்பீடு 4 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.   தமிழகத்தில் 15 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க 1200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  ஸ்மார்ட் கார்டு இருந்தால் எந்த கடையிலும் பொருட்கள் வாங்கும்  வகையில் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   அதேபோல் தமிழகத்தில் 37 மாவட்டங்களில் முதியோர் ஆதரவு மையங்கள் தொடங்கப்படும்