அதிமுக பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவின் அரசியல் எதிர்காலத்தை அஸ்தமிக்கும் வகையில் சொத்துக்கு குவிப்பு வழக்கு தீர்ப்பு நேற்று வெளியானது.
பெங்களூரு விசாரணை நீதிமன்ற நீதிபதி டி குன்ஹா அளித்த தீர்ப்பான, ரூ.10 கோடி அபராதமும், 4 ஆண்டுகள் சிறையும் உச்சநீதிமன்றம் உறுதிசெய்தது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதா மரணமடைந்துவிட்டால், அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதில் ஜெயலலிதாவின் சொத்துக்கள், தங்க நகைகள், 700 ஜோடி செருப்புகள், பட்டுப்புடவைகள், வைர நகைகள், சொத்துக்கள் இனி அனைத்தையும், நீதிமன்றம் கையகப்படுத்திக் கொள்ளும். மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சசிகலா, சுதாகாரன், இளவரசி ஆகியோர் இதன்மூலம் ஈட்டிய தொகை, சொத்துக்களும் பறிமுதலாகும்.

ேமலும், சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதமான ரூ.10 கோடியையும், ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ. 100 கோடியையும் சேர்த்து நீதிமன்றத்துக்கு செலுத்த வேண்டும். ஜெயலலிதா மரணமடைந்ததால்,
இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டாலும், கீழ்நீதிமன்றம் அளித்த தீர்ப்பையை நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. அந்த நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால், அதையும் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு சொந்தமான 250-க்கும் அதிகமான சொத்துக்களையும் நீதிமன்றம் கையகப்படுத்தும். இதற்கான பணிகள் விரைவாக நீதிமன்றம் மேற்கொள்ளும்.
மேலும், ஏற்கனவே சசிகலா, இளவரசி, சுதாகாரன் ஆகியோர் இந்த வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை அனுபவித்து விட்டனர். இதையடுத்து, மீதமுள்ள 3½ ஆண்டுகள் சிறையையும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் கழிக்க வேண்டி வரும்.
