ஒரு லட்சம் புத்தகங்கள் அடித்து வழங்க இருக்கிறார்கள். தமிழகப் போக்குவரத்துத் துறையில் வாகனங்களுக்கு, 'ஸ்டிக்கர்' ஒட்டுவது, ஜி.பி.எஸ்., கருவிகள், கண்காணிப்பு கேமராக்கள் வாங்கியது முறைகேடு நடந்து விட்டதாக தி.மு.க., தரப்பில் மு.க.ஸ்டாலினும், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில் பாலாஜி எல்லாம் குற்றம்சாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஜெயலலிதா ஆட்சியில், போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, தி.மு.க.,வின் கே.என்.நேரு அந்தத் துறைக்கு அமைச்சராக இருந்தபோது, செய்த முறைகேடுகளை பட்டியல் போட்டு, சட்டசபையில பேசினார். அப்போது, 'கே.என்.நேரு முறைகேடுகளை புத்தகமாவே போடலாம்' என கூறினார்.

 

இப்போது, இருவருமே ஒரே கட்சியில் இருக்கிறார்கள். அதனால், வருகிற தேர்தலில் செந்தில் பாலாஜி, கே.என்.நேரு போட்டியிடும் தொகுதிகளில், நேரு முறைகேடு விபரங்களை, ஒரு லட்சம் புத்தகங்களாக அச்சடித்து, வினியோகிக்க, அ.தி.மு.க.,வினர் திட்டமிட்டு இருக்கிறார்கள்