Asianet News TamilAsianet News Tamil

டெல்லி கலவரத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு 1கோடி இழப்பீடு ,டெல்லி முதல்வர் கெஸ்ரிவால் அறிவிப்பு.!!

டெல்லி கலவரத்தில் போலீஸ்காரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டது தற்போது தெரிய வந்திருக்கிறது.இதன் காரணமாக அந்த குடும்பத்திற்கு 1கோடியும், அவரது குடும்பத்திற்கு அரசு வேலையும் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஸ்ரிவால்.
1 crore compensation paid to family of deceased in Delhi riots
Author
Tamil Nadu, First Published Feb 26, 2020, 11:46 PM IST

T.Balamurukan

டெல்லி கலவரத்தில் போலீஸ்காரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டது தற்போது தெரிய வந்திருக்கிறது.இதன் காரணமாக அந்த குடும்பத்திற்கு 1கோடியும், அவரது குடும்பத்திற்கு அரசு வேலையும் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஸ்ரிவால்.

1 crore compensation paid to family of deceased in Delhi riots

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தலைநகர் டெல்லியில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.  இந்நிலையில், டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் டெல்லி வன்முறை களமாக மாறியுள்ளது.

இதுவரைக்கும்  டெல்லி வன்முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.  200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.  அவர்கள் ஜி.டி.பி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அவர்களில் சிலர் வீடு திரும்பி விட்டனர்.  வன்முறையை கட்டுப்படுத்த வடகிழக்கு டெல்லியில் 10 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த வன்முறையில் டெல்லி காவல் துறை தலைமை காவலர் ரத்தன் லால் பலியானார்.  முதலில் கல்வீச்சில் அவர் பலியானார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

1 crore compensation paid to family of deceased in Delhi riots

பிறகு, அவரது உடலில் துப்பாக்கி குண்டு காயங்கள் இருந்தன.  கடந்த 1998ம் ஆண்டு டெல்லி காவல் துறையில் சேர்ந்த அவருக்கு பூனம் என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.

டெல்லி வன்முறையில் பலியான டெல்லி காவல் துறை தலைமை காவலர் ரத்தன் லாலின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios