தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினை மலேசிய அமைச்சர் சந்தித்து பேசினார்.

திமுகவில் செயல் தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினை, மலேசிய விளையாட்டு துறை அமைச்சர் டத்தோ சரவணன், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் இன்று சந்தித்து பேசினார். செயல் தலைவராக பொறுப்பேற்றதற்காக ஸ்டாலினுக்கு, அவர் வாழ்த்து தெரிவித்தார்.

சில நிமிடங்கள் மட்டுமே இருந்த பேச்சு வார்த்தையின்போது, ஸ்டாலினை மலேசியா நாட்டுக்கு வரும்படி, டத்தோ சரவணன் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார். அதனை ஏற்று கொண்ட அவர், சமயம் வரும்போது, வருவதாக கூறினார்.