துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவருக்கு துணையாக இருக்கிறார். மேலும், அதிமுக ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது, ஒண்ணுமே செய்ய முடியாது என தம்கட்டி பேசியுள்ளார் துணை சபா தம்பிதுரை. 

தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றம் வரும் என்றும் அதிமுகவில் பல பிளவுகள் ஏற்படும் என்றும் எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில், ஸ்டாலின் பல திட்டங்களை போட்டு, முதல்வராக கனவு கண்டுக் கொண்டிருக்கிறார், ஆனால் அவரால் முடியுமா? அது முடியவே முடியாது. ஏனென்றால் மக்கள்  திமுக மீது வெறுப்பில் உள்ளனர்.  அவர்கள் அராஜகத்தில் ஈடுபடுவதால் மக்கள் பயங்கர கோபத்தில் உள்ளார்கள் என திருப்பரங்குன்றத்தில் திமுக மீது செம்ம காட்டமாகவே பேசியிருக்கிறார்.

அதிமுக ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது, அதிமுகவை அசைக்கவே முடியாது என  துணை சபா தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், அதிமுக எம்பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தார் தம்பிதுரை. 

அப்போது திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கலைப்போம் என ஆண்டிபட்டி தங்க தமிழ்ச்செல்வன் கூறியது குறித்து அவரிடம் கேள்வி கேட்டதற்கு பதிலளித்த துணை சபா தம்பிதுரை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவருக்கு துணையாக இருக்கிறார். மேலும், அதிமுக ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது, ஒண்ணுமே செய்ய முடியாது என தம்கட்டி பேசியுள்ளார்.