மாரிதாஸ் மீது திமுக வழக்கு தொடுத்து இருப்பதால் வடநாட்டு மீடியாக்கள் இதனை செய்தியாக வெளியிட்டு ஒளிபரப்பி வருகின்றன. 

மாரிதாஸ் பேசி வெளியிட்ட வீடியோக்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வட மாநிலங்களில் உள்ளவர்கள் கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து வீடியோ வெளியிட்ட இங்காபர் செய்தி நிறுவனம், ’’மாரிதாஸ் என்பவர் மீது திமுக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த மாரிதாஸ் எந்தக் கட்சியையும் சார்ந்தவர் அல்ல. சோஷியல் மீடியாக்களில் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் மாரிதாஸ் இருந்து வருகிறார். 

சமூகசேவகரான மாரிதாஸ் திமுகவை கடுமையாக விமர்சித்தும் பாஜக திட்டங்களையும் பாராட்டியும் சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவரது யூடியூப், ஃபேஸ்புக் பதிவில், பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்கலை பதிவிட்டு வருகிறார்.  அவர் மீது திமுக வழக்கு தொடுத்ததை தொடர்ந்து #Isupportmaridas  என்கிற ஹேஸ்டேக்கை உருவாக்கி அவருக்கு சமூக வலைதளங்களில் ஆதரவளித்து வருகின்றனர். 

திமுக போராட்டத்தை ஆதரித்து பாகிஸ்தான் செய்தி ஊடகமான ரேடியோ -பாகிஸ்தான் செய்தி வெளியிட்டு இருந்ததையும் மாரி தாஸ் விமர்சித்து இருந்தார்.  திமுகவுக்கு ஹவாலா பணம் எப்படி எங்கிருந்து வருகிறது. அதன் தொடர்புகள் என்ன என்பதை பற்றியும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். அதற்காகத்தான் பாகிஸ்தானுக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருவதாக  மாரிதாஸ் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் அதிருப்தியடைந்த திமுக மாரிதாஸ் மீது புகார் தெரிவித்தாகவும் கூறப்பட்டுள்ளது. ரஜினி ஆதரவாளரான மாரிதாஸ் அதன் மூலம் பாஜகவுக்கு ஆதரவளிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக ஆதரவளிக்கப் படாவிட்டாலும் மாரிதாஸ் ரஜினிக்கு ஆதரவாக செயல்பட்டு வருபவர்.

 

இதனிடையே திமுகவினர் மெண்டல் மாரிதாஸ் என்கிற ஹேஸ்டாக்கை உருவாக்கி எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.