பப்ஜி கேம் விளையாட ஏதுவாக பிரத்யேகமாக விவோ நிறுவனம் ஒரு ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்து உள்ளது. இன்று பிளிப்கார்ட் மற்றும் விவோ ஆன்லைன் ஷாப்பிங்கில் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது.விவோ நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாக Z சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து இருந்தது. 

இந்த நிலையில் தற்போது, விவோ Z1 Pro இன்று மதியம் முதல் ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியாவில் முதன்முறையாக ஸ்னாப்டிராகன் 712 AI பிராசசர் விவோ Z1 Pro ஸ்மார்ட்போனில் தான் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.

பேட்டரி சிறப்பு  அம்சங்கள்..! 

13 மணி நேரம் தொடர்ந்து யூடியூப் பார்க்க முடியும்

40 மணி நேரம் வரையில் நீடிக்கும் வாய்ஸ் கால் அதுமட்டுமா 21 நாட்கள்  இந்த  பேட்டரி தொடர்ந்து இருக்குமாம். அந்த அளவிற்கு மிக சிறந்த முறையில் மேம்படுத்தப்பட்டு உள்ளது என்றால் பாருங்களேன்.

செல்பி கேமரா:  32 மெகா பிக்சல், பின்பக்க கேமரா: 16 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, wide angle camera : 8 மெகா பிக்சல், கூடவே 2 மெகா பிக்சல் போக்கே கேமராவும் உள்ளது. 

மற்ற சிறப்பம்சங்கள்: 

4ஜிபி ரேம் - 14,990 ரூபாய்
64ஜிபி - 14,990 ரூபாய்
128ஜிபி - 17,990 ரூபாய்

பப்ஜி கேம் பிரியர்களுக்கு இந்த மொபைல் மிகவும் வசதியாக இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது.