உ.பி.யில் 10 வயதில் இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட ஆங்கேஷ் 15 ஆண்டுகள் கழித்து, இளைஞராக தனது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார்.

பாம்புக்கடியால் உயிரிழந்துவிட்டதாக நம்பி ஆற்றில் வீசப்பட்ட சிறுவன் 15 ஆண்டுகள் கழித்து உயிருட்ன் திரும்பி வந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் பாகல்பூரில் முராசோ கிராமத்தைச் சேர்ந்தவர் ஆங்கேஷ் யாதவ். இவர் 10 வயது சிறுவனாக இருந்தபோது இவரைப் பாம்பு கடித்துவிட்டது. விஷம் உடம்பில் ஏறியதும் மயக்கம் அடைந்த ஆங்கேஷை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை!

மருத்துவமனைக்குப் பதிலாக ஒரு மந்திரவாதியிடம் கொண்டு சென்றிருக்கிறார்கள். சிறுவன் ஆங்கேஷின் உடலைப் பரிசோதித்துப் பார்த்த மந்திரவாதி பையன் இறந்துவிட்டான் என்று முடிவுகட்டிவிட்டார். இதனால் குடும்பத்தினர் ஊர் வழக்கப்படி, ஆங்கேஷின் உடலை வாழைத்தண்டுடன் வைத்துக் கட்டி சூர்யா நதியில் வீசி எறிந்துவிட்டனர்.

Gir Lions: குஜராத் கிர் காடுகளில் 2 ஆண்டுகளில் 240 சிங்கங்கள் சாவு

இந்நிலையில், இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட சிறுவன் ஆங்கேஷ் 15 ஆண்டுகள் கழித்து, கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி, தனது சொந்த கிராமத்துக்குத் திரும்பியுள்ளார். ஆற்றில் தூக்கி வீசப்பட்டதும் சிறிது நேரத்தில் விழிப்பு வந்துவிட்டதாகவும் ஒரு லாரி டிரைவர் தன்னைக் காப்பாற்றியதாகவும் ஆங்கேஷ் கூறுகிறார்.

ஆற்றிலிருந்து காப்பாற்றப்பட்டதும் பீகாரைச் சேர்ந்த அமன் மாலி என்ற பாம்பாட்டி, ஆங்கேஷின் உடலில் இருந்த விஷத்தை முறிக்க சிகிச்சை செய்து குணப்படுத்தி இருக்கிறார். பின் தன்னுடனே அழைத்துச் சென்றிருக்கிறார்.

இத்தனை வருங்களும் சொந்த ஊரில் உள்ள தன் குடும்பத்தை ஞாபகம் வைத்திருந்ததாவும் அவர்களைப் பார்க்கவே வந்திருப்பதாவும் ஆங்கேஷ் தெரிவிக்கிறார். 15 ஆண்டுககள் கழித்து அவர் ஊருக்கு வந்ததால் அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி முராசோ கிராம மக்கள் அனைவருமே ஆச்சரியத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.

Bengaluru: பெற்றோர் பேச்சைக் கேட்டு திருமணத்துக்கு மறுத்த காதலியை கொடூரமாகக் கொன்ற இளைஞர்