ஒரு வாரத்திற்கு ஏழு நாட்கள். அதில் ஐந்தாவது நாளாக வர கூடியது வியாழக்கிழமை ஆகும். இந்த வியாழக்கிழமை அன்று பிறந்தவர்கள் மிகச் சிறந்த பண்புடையவர்களாக விளங்குவர். பெரும் செல்வந்தராக இருப்பர்.

மனதிற்கினிய சொற்களை பேசுபவர்களாகவும் இருப்பர். சிறந்த ஆசிரியர்களாகவும், மக்களால் விரும்பப்படுகிறவராகவும், செயல்படுவர்.

அரசர்களால் மதிக்கப்படுபவர்களாகத் திகழ்வர். இவர்களது யோசனை மற்றவர்களை வெற்றி பெரியவைக்கும். எதையும் முன் கூட்டியே யூகித்து உணரும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு.

குருவை பற்றி சில தகவல்கள்:

உலோகம் - தங்கம்
நவரத்தினம் - புஷ்பராகம்
வஸ்திரம் - மஞ்சள் நிற வஸ்திரம் 
வாகனம் - யானை
சமித்து - அரசு 
சுவை - இனிப்பு 
அதிதேவதை - பிரம்பா, தட்சிணாமூர்த்தி 
குணம் - சாத்வீகம் 
ஆட்சி வீடு - தனுசு, மீனம் 
உச்ச வீடு - கடகம் 
நீச வீடு - மகரம் 
நட்சந்திரங்கள் - புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, 
குரு திசை - 16 வருடங்கள் 
ஒரு ராசியில் தங்கும் காலம் - ஒரு வருடம் 
எண்கணிதப்படி எண் - 3 
தானியம் - கொண்டை கடலை 
புஷ்பம் - முல்லை 
காரகத்துவம் - புத்திரப்பேறு