youngsters are planning to enjoy new year in pub
டிசம்பர் 31 க்கு பப்(pub)போறீங்களா......ஒரு நிமிடம் இதை படிங்க....
ஒவ்வொரு புத்தாண்டு தினத்தன்று இளசுகள் கூட்டம் தான் எங்கு பார்த்தாலும் பார்க்க முடியும்....
அதுவும் டிசம்பர் 31 ஆம் தேதி இரவு என்றால், அவ்வளவுதான் சிட்டியில் உள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல்களில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்...
இதனை வரவேற்பதா..?என்றால் ஒரு கேள்வி எழுகிறது.....
டான்ஸ்/குடி
பெண்கள் ஆண் நண்பர்களுடனும், ஆண்கள் பெண் நண்பர்களுடனும் பப் செல்வார்கள்....அன்றைய தினத்தில்,ஆண்கள் பெண்கள் வேறுபாடுகள் இன்றி குடிப்பதும்,டான்ஸ் செய்வதுமாக இருப்பார்கள்....
அளவுக்கு அதிகமான போதையில் பல பெண்கள் வாந்தி எடுப்பதும், மயக்கம் போட்டு விழுவதும்...சக நண்பர்களே,பெண்களிடம் குடி போதையில் தவறாக நடக்க முயற்சிப்பதும்...இருக்கும்
அரை குறை ஆடை
பப் செல்ல வேண்டும் என்றால், அதற்கான தனி ஆடையும் தேவை..... பெண்கள் பனியன் டி சர்ட்,ஜீன்ஸ் பேண்ட் என போட்டு வருவார்கள்.....அதுமட்டும் இல்லமால்,அரைகுறை ஆடையை அணிந்து வந்து,பப்பில் என்ஜாய் செய்வார்கள்.
குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது
புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில், நன்கு குடித்து விட்டு,மது போதையில் சக நண்பர்களுடன் சேர்ந்து தாரு மாறாக வண்டி ஓட்டி விபத்துக்களை ஏற்படுத்துவதும் அன்றே....

விடுதியில் தங்கி உள்ள பெண்கள்
பெற்றோர்கள் நம்பிக்கையுடன் பெற்ற பிள்ளைகளை நகரத்திற்கு அனுப்பி படிக்க வைத்தால்,பல பெண்கள் ஆண் நண்பருடன் தெரிந்தும் தெரியாமலும் ஊர் சுற்றுகிறார்கள்.
அதுவும் புத்தாண்டு என்ஜாய் செய்ய வேண்டும் என்பதற்காக, பப், டிஸ்கோ, பீச் என அனைத்து இடங்களுக்கும் செல்வர்.
இவ்வாறு சென்றாலும், அது பாதுகாப்பானதாக அமைய வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது...
எனவே, புத்தாண்டை ஒட்டி வெளியில் செல்ல இருப்பவர்கள் பாதுகாப்பான ஒரு கொண்டாட்டத்தை மேற்கொண்டால் சரியாக இருக்கும்
