you have medi claim just read this

உங்களுக்கு“MEDI CLAIM”இருக்கா? இதை படிங்க...

யாருக்குமே எந்த நேரத்தில் எது நடக்கும் என தெரியாது....தினந்தோறும் அலுவலகம் செல்லும் போதோ அல்லது இயற்கையாகவே நம் உடலில் ஏற்படும் சில பல பிரச்சனை அல்லது நோய்வாய் படும் நேரத்தில் நமக்கு உறுதுணையாக இருப்பது தான் “இன்சூரன்ஸ்”..

அதுவும்“MEDI CLAIM”இன்சூரன்ஸ் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பார்க்கலாம்.

முன்பெல்லாம் உடல்நலம் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யும் நிலைமைக்கு தள்ளப்படும் போது,நமக்கு ஏற்படும் மருத்துவ செலவை நம்மிடமிருந்து செலவிட்ட பின்பு தான், அதனை claim செய்து அதற்கான பணத்தை பெற முடியும் .

ஆனால் தற்போது புது வசதியாக cashless முறையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும்.அதாவது,இதில்அரசு சார்ந்த பல இன்சூரன்ஸ் இருக்கிறது

உதாரணத்திற்கு, ஒரியன்டல் மெடிக்ளேம்” சொல்லலாம்.இதில பல வகையான schemes உள்ளது

நாம்,தேர்வு செய்யும் திட்டம் மூலம் வருடத்திற்கு 10 ஆயிரம் செலுத்தினாலே போதும்.அந்த வருடத்திற்குள் ஏதாவது நாம் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால்,ஐந்து லட்சம் ரூபாய் வரையில் சிகிச்சை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

தினந்தோறும் பல வற்றிற்கு தேவை இல்லாமல் வீண் செலவு செய்கிறோம்,ஏதாவது பிரச்னை என்றால்,யாரிடமாவது பணத்தை கடனாக பெற்று சிகிச்சை எடுத்துக்கொள்கிறோம்.

தக்க தருணத்தில்,நமக்கு பேருதவியாக இந்த இன்சூரன்ஸ் கண்டிப்பாக உதவும் என்பதால், தேவைபடுபவர்கள் அரசு சார்ந்த இன்சூரன்ஸ் திட்டத்தில் ஏதாவது ஒரு திட்டத்தை குடும்ப நலனுக்காக எடுத்துக்கொள்ளலாம்.

தக்க தருணத்தில் உதவும்.....