நம் குழந்தையை இப்பவே இதை செய்ய சொல்லணும்........”world handwash day “
வருடத்தின் ஒவ்வொரு நாளும் மிக சிறப்பான நாட்களே. அந்த வரிசையில் இன்று “ உலக கை கழுவும் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
உலகத்துலே 2 மில்லியனுக்கு அதிகமான குழந்தைகள் டயரியா போன்ற வயிற்றுப் போக்கு மற்றும் நுரையீரல் தொற்றுக்களால் இறக்கிறாங்களாம். முறையாக சோப்பை பயன்படுத்தி கைகள் கழுவுவதன் மூலம் இந்த எண்ணிக்கையை குறைக்க முடியும். இதன் முக்கியத்துவம் உணரப் பட்டதால்தான் PPPHW (PUBLIC-PRIVATE PARTNERSHIP FOR HAND WASHING என்ற அமைப்பு 2008 லேயிருந்து ஒரு இயக்கமாக மாறி கைகழுவதன் முக்கியத்துவத்தை பல்வேறு வகைகளில் மக்களுக்கு உணர்த்தி விழிப்புணர்வு உருவாக்க முயற்சி பண்ணுது. அதில் ஒன்றே உலக கைகழுவும் தினம் கொண்டாடுதல்.
இந்த அமைப்பில், உலக வங்கி, யூனிசெப்,(United Nations International Children Emergency fund) மற்றும் தனியார் நிறுவனங்களும் இணைந்து செயல் படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 15 ஆம் தேதியன்று கை கழுவும் தினம் கொண்டாட முடிவு செய்யப் பட்டது.
அதன்படி , மிக முக்கியமான இந்த செயலால் உண்மையில் நம் குழந்தைகள் பயனடைவர்.நாமும் இந்த பழக்கத்தை அனைவரிடமும் ஊக்குவிக்க வேண்டும் .
