“உலக நோயாளர் தினம்”  ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில், நோய்வாய்ப்பட்டவர்களுக்காக அனைவரும் இறைவனை பிராதிக்கின்றனர்.

“உலக நோயாளர் தினம்” ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில், நோய்வாய்ப்பட்டவர்களுக்காக அனைவரும் இறைவனை பிராதிக்கின்றனர்.

திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல்,1992ஆம் ஆண்டு மே மாதம் 13-ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 11 ஆம் நாளை உலக நோயாளிகள் தினமாக கடைபிடிக்குமாறு கூறியுள்ளார். அவரின் அறிவுரையின்படி போப் ஜான் பால், அவர்களால் பிப்ரவரி 11ஆம் நாள் உலக நோயாளர் தினமாக அனுசரிக்கப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 11ஆம் நாள் உலக நோயாளர் தினம் என்பது கத்தோலிக்க திருச்சபையால் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

 இது தொடர்பாக திருத்தந்தை இரண்டாம் பவுல், பிப்ரவரி 11ஆம் நாள் கடைப்பிடிக்க வழிவகுத்தற்கு ஒரு முக்கிய வரலாற்று காரணம் இருந்தது. 1917ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் நாள் அன்னை மரியா போர்த்துகல் நாட்டு பாத்திமா நகரில் மூன்று சிறுவர்களுக்குக் காட்சியளித்தார். மே மாதம் 13ஆம் நாள் (1981ஆம் ஆண்டு) தம்மைத் தாக்கிய துப்பாக்கிக் குண்டுகளிலிருந்து தம் உயிரைக் காத்தது அன்னை மரியாவின் அருளே என்று கூறினார். அந்த அன்னையின் நினைவாக மே 13ஆம் நாளைத் தேர்ந்தெடுத்து, அன்று 1992ஆம் ஆண்டில் திருத்தந்தை "உலக நோயாளர் நாள்" கொண்டாட்டத்தை ஏற்படுத்தியதாக கூறினார்.

இந்த நாளில் நோய்வாய்பட்டவர்களுக்காக அனைவரும் இணைந்து பிரார்த்தனை செய்வர். அதோடு இந்த நாளில் நோய்வாய்ப்பட்டவர்களின் துணை நின்று கடினமாக உழைப்பவர்களுக்காகவும் நேரம் ஒதுக்கி பிரார்த்தனை செய்கிறார்கள். மேலும் இந்த உலக நோயாளர் தினத்தில் நிறுவனங்கள் நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்துகள் மற்றும் ஆன்மிக வழியில் வழிகாட்டுதல்களை போன்றவற்றை வழங்குகின்றன.

அதிலும், குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா வைரஸ் வெடிப்பின் போது மருத்துவ பணியாளர்கள் மற்றும் பிற கொரோனா முன்களப்பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றவும், கொடிய தொற்று பரவுவதைத் தடுக்கவும் அயராது உழைத்து வருகின்றனர். எனவே இந்த நாளில் நாம் நம் சுகாதாரத்தை பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.\

ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைச் சமச்சீராக வைத்திருப்பதில் தான் அடங்கி இருக்கிறது. நமது வாழ்க்கை முறையில் இன்னும் அதிகமான ஆரோக்கியம் தேவை என்று நாம் உணா்ந்தால், சிறுசிறு முயற்சிகள் செய்தால் போதும். சிறந்த ஆரோக்கியத்தைப் பெற முடியும். அதாவது நமது உணவு முறையில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தினால் போதும். நாம் முழுமையான ஆரோக்கியத்தைப் பெற முடியும்.எனவே, இந்த நாளில் நோயின்றி அனைவரும் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை பிராத்தனை செய்வோம்.