Asianet News TamilAsianet News Tamil

ஓடும் ரயிலில் பெல்லி டான்ஸ் ஆடி வியக்க வைக்கும் பெண்.. வைரல் வீடியோ..

தற்போது இந்த வைரல் வீடியோவில் ஒரு பெண் சமூக வலைதளங்களில் ஒரு அசாத்தியமான சாதனையை செய்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்

woman doing belly dance on a moving train.. Viral video.. Rya
Author
First Published Sep 20, 2023, 1:37 PM IST

டெல்லி மெட்ரோ போலவே, மும்பை மின்சார ரயிலும் மக்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தரும் இடமாக உள்ளது. பெரும்பாலான நாட்களில் மும்பை லோக்கல் ரயில் தொடர்பாக பல செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. தெருவோர வியாபாரிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்வது முதல் நடனம் மற்றும் பாடுவது வரை பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஆனால் தற்போது இந்த வைரல் வீடியோவில் ஒரு பெண் சமூக வலைதளங்களில் ஒரு அசாத்தியமான சாதனையை செய்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். ரயிலில் பெல்லி டான்ஸ் ஆடுவதில் தன் திறமையை வெளிப்படுத்துகிறார்.

நீல நிற ஆடை அணிந்து, ஓடும் ரயிலில் தனது பெல்லி நடனத்தை வெளிப்படுத்துகிறார். அந்த இடம் சாண்ட்ஹர்ஸ்ட் சாலை மற்றும் மஸ்ஜித் நிலையங்களுக்கு இடையில் இருப்பதாகத் தோன்றுகிறது என்று தலைப்பு குறிப்பிடுகிறது. இதேபோல், ரயிலிலும் இதுபோன்ற பல விஷயங்கள் நடக்கின்றன என்று கேப்ஷனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே அமைச்சகமும் அந்த பதிவில் டேக் செய்யப்பட்டுள்ளது.

 

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது  இந்த வீடியோவுக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த பெண் திறமையை பலரும் பாராட்டினர். இருப்பினும், மும்பை ரயில்களில் இவ்வளவு இடம் இருப்பது ஆச்சரியம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இதேபோல், முன்னதாக, மும்பை உள்ளூர் ரயிலில் ஒருவர் லதா மங்கேஷ்கரின் பிரபலமான பாடலைப் பாடிய வீடியோ வைரலானது. வீடியோவில், அவர் பாடும்போது மக்கள் கைதட்டி உற்சாகப்படுத்துவதையும், மற்றவர்கள் நடனமாடத் தயாராக இருப்பதையும் நீங்கள் காணலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios