கவுந்தம்பாடி, புதூரை சேர்ந்த ஸ்ரீதரை லாவண்யா திருமணம் செய்து கொண்டார். அதற்கு அவர் விதித்துள்ள 10 கட்டளைகளை பேனர் அடித்து ஒட்டப்பட்டிருந்து.  உன்னுடைய மனைவி நானாகிறேன். மற்றொரு காதலி உனக்கு இருக்கக்கூடாது. கண்டவரின் மனைவியை பார்த்து சிரிக்கக் கூடாது. அவளுடைய அழகை குறித்து வர்ணிக்கக் கூடாது.  இரவு 8.30 மணிக்கு கிச்சன் க்ளோஸ். இரவு 9.30 மணிக்கு பெட்ரூம் க்ளோஸ். தேங்காய் எண்ணேய், ஷாம்பு, சோப்பு, துண்டு சொந்தமாய் எடுத்துக் கொண்டு போய் குளிக்க வேண்டும்.  அதற்காக தொந்தரவு செய்யக்கூடாது.

 

ஹோட்டல் சாப்பாட்டை நிறுத்தி பழைய சாப்பாடானாலும் வீட்டில் சாப்பிடவேண்டும். தண்ணி அடித்தால் வீட்டிற்கு வெளியில் படுத்துக் கொள்ள வேண்டும். சாயங்காலம் 6.30 முதல் 9.30 வரை சீரியல் டைம். கூப்பிட்டு தொந்தரவு செய்யக்கூடாது. பச்சத் தண்ணி கூடக் கிடையாது. 

மாமியாரின் செயல்பாடுகளுக்கு எவ்வித தயவு சாட்சண்யமும் பார்க்காமல் பதிலடி கொடுக்கப்படும். முக்கியக் குறிப்பு என்னிடம் கோபப்பட்டால் எனது அண்ணன்களாகிய இருவரும் இருந்து தர்ம அடி விழும் என விதித்துள்ள கட்டளைகளை ஏற்றுக் கொள்கிறேன் என மணமகன் சம்மதித்து கையெழுத்து இட்டுக் கொடுத்துள்ளார். இந்த பேனர் புகைப்படங்களாக மாறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.