Asianet News TamilAsianet News Tamil

ஸ்டைலான ஆடையா? சௌகரியமான ஆடையா? குளிர்காலத்தில் எப்படியான ஆடை அணிவது சிறந்தது!

குளிர் காலத்திற்கு ஏற்றவாறு எப்படி பட்ட ஆடைகள் அணிய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.

Winter season wearing clothes
Author
Chennai, First Published Jan 17, 2022, 2:26 PM IST

இன்றைய இளம் தலைமுறையினர் குளிர் காலத்தில் அணியக் கூடிய ஆடைகளை நாகரிகம் கருதி தவிர்த்து வருகின்றனர். மாறாக ஃபேஷன் உடைகளை விரும்பி அணிகின்றனர். இன்றைய நவீன உலகில், கரோனா என்கின்ற கொடிய வைரஸ் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்களது செயல்களை வீட்டில் இருந்து தொடர்கின்றனர். இந்த சூழலில், வீட்டில் இருக்கும் பெரும்பாலான மக்கள் தங்களது ஓய்வு நேரத்தினை இணையத்தில் செலவிடுகின்றனர். அவற்றுள் பெருவாரியான மக்கள் சமூக வலைதளங்களில், அழகு, ஃபேஷன் உடைகளை தேடுவதில் அதிக நாட்டம் உடையவர்களாக இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, இன்றைய இளைய தலைமுறையினர் சமூக வலைதளங்களில் வலம் வரும் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் ஃபேஷன் உடைகளை ஏராளமாக வாங்கி குவிகின்றனர். நம்முடைய சில தவறான ஃபேஷன் பழக்க வழக்கங்கள் நமது இயல்பை மோசமானதாக மாற்றி விடுகிறது.

அவசியமாக தவிர்க்க வேண்டிய ஃபேஷன் பழக்க வழக்கங்கள் பற்றி இங்கே பார்ப்போம்.

Winter season wearing clothes

குளிர்காலத்தில் இறுக்கமான உடைகள் அணிவது சிக்கல்:

உங்களின் உடல் பருமனை மறைப்பதற்காக ஸ்லிம் பிட் போன்ற இறுக்கமான உடைகளை அணியும் பழக்கம் உடையவரா நீங்கள்? அப்படி என்றால் இதை இப்போதே விட்டுவிடுங்கள். பொதுவாக இறுக்கமான உடைகள் உங்கள் உடலுக்கு அசௌகரியத்தை தரக்கூடியவை. மேலும் உங்களுக்கு நல்ல உணர்வை தராது. மற்றவர்களின் பார்வையில் நீங்கள் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக இதை செய்ய வேண்டாம். இவை உடல் ஆரோக்கியத்தை பாதிக்கின்றனர். 

பொருத்தமற்ற உள்ளாடைகள்: 

பெண்களைப் பொறுத்தவரை மார்பக அளவு மற்றும் வடிவத்துக்கு ஏற்ற உள்ளாடைகளை அணிவது நல்லது. இதற்கு மாறாக நமது தோற்றம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இறுக்கமான, பொருத்தமில்லாத உள்ளாடைகளை அணிந்தால் அது பல உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும். அதே போன்று எல்லா வித ஆடைகளுக்கும் ஒரே வகையான உள்ளாடைகளை பயன்படுத்த முடியாது. ஒவ்வொரு வகையான உடைக்கும் இது மாறுபடும்.

குளிர் காலத்திற்கு ஏற்றவாறு எப்படிபட்ட ஆடைகள் அணிய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்!

Winter season wearing clothes

ஓவர் கோட் மற்றும் தொப்பி:

முக்கியமாக கடும் குளிரில் உங்களை கதகதப்பாக வைக்கவும், குளிர் காற்று வீசாமலும் இருப்பது போன்ற ஓவர் கோட் மற்றும் தொப்பி அணியலாம். 

காதுகளை மூடும் உடை அணிவது அவசியம்:

காதுகளை கண்டிப்பாக மூடிப் பாதுகாக்க வேண்டும், குறிப்பாக குளிர்காற்று வீசும்போது இவ்வாறு செய்ய வேண்டும், ஏனென்றால் காதுகளில் குளிர் காற்றினால் பனிக்கடி ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம். இதனால் சளி, இருமல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படக் கூடும். அதேபோன்று, கோட், தொப்பி, கையுறைகள், பூட்ஸ் போன்றவை குளிரில் இருந்து உங்களை பாதுகாக்கும் கவசங்கள் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

தள்ளுபடிகள் ஷாப்பிங்:

மாறாக, மாத இறுதி தள்ளுபடி அல்லது ஆண்டின் இறுதி தள்ளுபடி போன்றவற்றை நம்பி பணத்தை இழக்காதீர்கள். எனவே இவை உங்களின் ஆசையைத் தூண்டி அவற்றை நீங்கள் வாங்க வைப்பதற்கான ஒரு சிறிய ட்ரிக் தான் தவிர உங்கள் உடலுக்கு நல்லது அல்ல.
  
 

Follow Us:
Download App:
  • android
  • ios