“நாயை கொல்லுங்க.”......தங்க காசை பரிசா வெல்லுங்க.........!!!

கேரளாவில் அதிகரித்துள்ள தெருநாய்களால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருவதால், நாய்களை கொல்லும் முயற்சியில், கேரளாவில் உள்ள கல்லூரி ஒன்றின் முன்னாள் மாணவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

அதாவது, வருகிற டிசம்பர் 10ஆம் தேதிக்குள் அதிக நாய்களைக் கொல்பவர்களுக்கு தங்க நாணயங்களைப் பரிசாக அளிக்கவுள்ளதாக முன்னாள் மாணவர்கள் அமைப்பு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மாணவர்கள் அமைப்பில், மொத்தம் 1,200 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில், இவர்கள் அனைவரும் கூட்டாக சேர்ந்து, இந்த முடிவை எடுத்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல், அதிக நாய்களை கொல்பவர்களுக்கு, இந்த அமைப்பின் மூலமாக,

தங்க நாணயங்கள் பரிசளிக்கப்படும் என்றும் அறிவித்து உள்ளனர்.


மேலும், கடந்த ஒராண்டு காலத்தில் கேரளாவில் 53 ஆயிரம் பேர் தெருநாய்களால் தாக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.