"நெஞ்சிருக்கும் வரை"  படம் போன்றே... காதலர்  தினத்தன்று...  மூளைச்சாவு அடைந்த  தன் மனைவியின் இதயத்தை  தானம் செய்த கணவர் 

காதலர் தினமான இன்று மூளைச்சாவு அடைந்த தன் மனைவியின் இதயம் உள்ளிட்ட ஐந்து உறுப்புகளை தானமாக வழங்கி உள்ள சம்பவம் அனைவரையும் நெஞ்சுருக வைத்துள்ளது.

சிதம்பரத்தை சேர்ந்தவர் கௌதம ராஜ். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கோகிலா இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது. தற்போது கர்ப்பமாக உள்ளார் கோகிலா.

கர்ப்பமாக உள்ள கோகிலாவை சிகிச்சைக்காக அனுமதித்தபோது உடலில் ரத்த அணுக்கள் குறைவாக இருந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து வேலூர் மாவட்டம் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் கோகிலா.இவருக்கு சென்ற வாரம் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்டது.

ஆனால் கோகிலாவின் உடல் நிலையில் நாளுக்கு நாள் மோசமடைந்து வந்துள்ளது. பின்னர் தான் தெரிய வந்தது அவர் மூளைச்சாவு அடைந்துள்ளார். இதனை அறிந்த கணவர் மற்றும் அவரது உறவினர்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர். செய்வதறியாது தவித்த தனது மனைவியின் உடல் உறுப்புகளை காதலர் தினமான இன்று தானம் செய்ய வேண்டும் என விரும்பினார்.

அதற்கேற்றவாறு இதயம் நுரையீரல் கணையம் உள்ளிட்ட ஐந்து உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்துவதற்கான அறுவை சிகிச்சை இன்று வேலூரில் நடைபெற்றது. காதலர் தினத்தன்று தன் மனைவியின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன் வந்த கௌதம ராஜிக்கு பலரும் பாராட்டு தெரிவிக்கின்றனர். அதேவேளையில் மனைவி இறந்து பெரும் சோகத்தில் மூழ்கி உள்ள இவருக்கு ஆறுதல் கூற கூட முடியாமல் உறவினரால் தவுய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் வேலூரில் மக்களிடையே வெகுவாக பரவி அனைவரையும் சோகத்தில் மூழ்க வைத்துள்ளது