தன்னுடைய கணவர் ஒரு வாரத்திற்கும் மேலாக தன்னை தூய்மையாக வைத்துக் கொள்ளாமல் ஷேவ் செய்து கொள்ளாமலும் குளிக்காமலும் இருந்ததால் மனைவி விவாகரத்து கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் சுவாரசியமாக பேசப்பட்டு வருகிறது.

மத்திய பிரதேசத்தில் கலப்பு திருமணம் செய்துகொண்ட ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குழந்தை இல்லை கணவர் வீட்டின் அருகிலேயே ஒரு கடையை நடத்தி வருகிறார். இந்நிலையில் தூய்மையாக இல்லாமல் எப்பொழுது பார்த்தாலும் அசிங்கமாகவும் கொஞ்சம் கூட சுத்தமே இல்லாமல், குளிக்காமலும் ஷேவ் செய்யாமல் இருப்பதால் அருவருப்பாக இருக்கிறது என மனைவி விவாகரத்து முடிவை எடுத்துள்ளார்.

அந்த பெண்ணின் குடும்பத்தார் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் மனைவி கேட்பதாக இல்லை. கணவரும் பதிலுக்கு விவாகரத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். பின்னர் இவர்கள் இருவரையும் வரும் ஆறு மாதத்திற்கு பிரிந்து இருக்குமாறு நீதிபதி தெரிவித்ததை அடுத்து தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இன்றைய கால சூழ்நிலையில் விவாகரத்து கோரி பல்வேறு காரணங்கள் இருந்தாலும் இதுபோன்ற சில காரணங்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.