கொரோனாவால் குணமடைந்த "கணவரை" வீட்டு வாசலில் கூடசேர்க்காத மனைவி..! பரிதாபத்தின் உச்சம் ..!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் நாள் அதிகரித்து நிலையில், தமிழகத்தில் மட்டுமே தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 300 தாண்டியது. இந்த ஒரு நிலையில் திருவனந்தபுரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்த கணவரை, வீட்டிற்குள் அனுமதிக்க முடியாது என கூறி உள்ளார் மனைவி 

வேறு எந்த ஒரு உடல் ஆரோக்கியம் சீர்குலைவு என்றாலும் உறவு முறைகள் உடன் இருந்து கவனித்து அவர்களை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ள அனைத்து விதங்களிலும் முயற்சி செய்வார்கள். ஆனால் கொரோனா அனைவரையும் பெரும்பாடு படுத்தி வைக்கிறது.யாருக்கும் தைரியமா முன்வந்து உதவி கூட முடியவில்லை.

அதற்கு உதாரணமாக, கொரோனாவால் பாதிக்கப்பட்ட கணவர் அங்குள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சகிச்சை பெற்று பின் ஒருவழியாக மீண்டு ஆவலுடன் தனது மனைவி, குழந்தைகளை காண வீட்டிற்கு சென்று உள்ளார்.ஆனால் கொரோனா பயத்தின் காரணமாக தனது குடும்பத்தினருக்கு இந்த ஆட்கொல்லி நோய் வந்து விடக் கூடாது என்பதற்காகவே அவரை வீட்டிற்குள் சேர்க்கவில்லை மனைவி. அதன் பின் தற்போது அவர் மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் உள்ளார்.

இந்த விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது .இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனும் உறுதிபடுத்தி உள்ளார். இதுகுறித்து குறிப்பிட்ட அவர், கொரோனா பதித்த நபரிடமிருந்து, குடும்ப உறுப்பினருக்கு தொற்றாது. தற்போது அவர் கண்காணிப்பில் தான் உள்ளார். எனவே அவரது குடும்பத்தினருக்கு கவுன்சலிங் வழங்கி வீட்டிற்கு அனுப்ப உள்ளது.