why we keep the botton left side for girls dress



நாம் தினமும் அணியும் ஆடைகளில், ஆண்கள்  பயன்படுத்தும்  சட்டையில்  பட்டன்  வலது பக்கமாகவும், பெண்கள்  சட்டையில்  இடப்புறமாகவும் பட்டன்  இருக்கும் என்பதை நம்மில்  எத்தனை  பேருக்கு  தெரியும் .

வலப்புறம்  இடப்புறம்  என்ற  இந்த சிறிய வேறுபாடு , எதற்காக இருக்கிறது  என்று  தெரியுமா ?

விக்டோரியா  மகாராணி  காலத்திலேயே சட்டை போட்டுக் கொள்ளும் வழக்கம்  இருந்துள்ளது . அதே வேளையில் பணக்கார  வர்க்கத்தை  சேர்ந்தவர்களே  பட்டன்  வைத்து  ஆடை  அணிவது  வழக்கமாக  இருந்தது .

அவ்வாறு அவர்கள் அணியும் அந்த   ஆடையின்  பின் பக்கத்தில் பட்டன் இருப்பதால், பணிப்பெண் தான் அவர்களுக்கு பட்டன்  போட்டு  விடுவார்கள் . அவ்வாறு  பட்டன்  போட்டு விடும் போது,  பெண்களுக்கு  வலது  பக்கம் கையிலிருந்து இடப்பக்க  வளையத்தில் மாட்டி விடுவார்கள் . இந்த வகையில்   பட்டன் போடுவதற்கு  சுலபமாக இருந்ததால்,  அதனையே  தொடர்ந்து பழக்கத்தில் கொண்டுவரப்பட்டது.

ஆண்களை பொறுத்தவரையில், அவர்களே சட்டை அணிந்து  கொள்வதால் அவர்களுக்கு வலப்பக்கம் பட்டன் வைக்கப்பட்டுள்ளது.