Asianet News TamilAsianet News Tamil

தெய்வங்களுக்கு வாழைப்பழம் வைத்து படைக்க மறக்காதீங்க..!

வாழை மரத்தில் இருந்துதான் வாழைகன்று வரும். பழம் கொட்டை என்பது கிடையாது. அப்படி நமது எச்சில் படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள். 

why we are praying the god by keeping banana fruit
Author
Chennai, First Published Dec 25, 2019, 6:28 PM IST

தெய்வங்களுக்கு வாழைப்பழம் வைத்து படைக்க மறக்காதீங்க..! 

எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்த பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால் வாழைப்பழத்தை உரித்து முழுமையாக வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை.

why we are praying the god by keeping banana fruit

இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது. எனது இறைவா... மீண்டும் பிறவாத நிலையைக் கொடு என வேண்டவே நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம். அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு. அது மட்டுமல்ல; தேங்காய் வாழைபழம் இரண்டும் நமது எச்சில் படாதவை. மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு கொட்டையை போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது.

why we are praying the god by keeping banana fruit

ஆனால் தேங்காயை சாப்பிட்டு விட்டு ஓட்டை போட்டால் அது முளைக்காது. முழுத் தேங்காயிலிருந்து தென்னை மரம் முளைக்கும். அதுபோல வாழை மரத்தில் இருந்துதான் வாழைகன்று வரும். பழம் கொட்டை என்பது கிடையாது. அப்படி நமது எச்சில் படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள். நாமும் இந்த மரபினைப் பின்பற்றி வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios