நாளை "இரவு 9 மணி.. 9 நிமிடம்" எதற்காக விளக்கேற்றுகிறோம் தெரியுமா? சுவாரசிய தகவல்!

பிரதமர் நரேந்திர மோடி வீடியோ மூலம் நாடு மக்களிடம் உரை நிகழ்த்திய போது, 5 ஆம் தேதியான  நாளை   இரவு 9 மணிக்கு 9 நிமிடம் விளக்கறேற்றுமாறு தெரிவித்து உள்ளார்

அதாவது, வீட்டின் மின் விளக்குகளை மட்டும் அனைத்துவிட்டு டார்ச்,மெழுவர்த்தி,தீபம் ஏற்றுங்கள் என தெரிவித்து இருந்தார் மோடி. இதற்கு முன்னதாக, கொரோனாவிற்கு எதிராக போராடி நம்மை காக்கும்  மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், ராணுவத்தினர் என அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கும்  வகையில் கைதட்டி நன்றி தெரிவிக்குமாறு குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் நாளை இரவு 9 மணிக்கு 9 நிமிடம் விளக்கேற்றுமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டு  உள்ளார் பிரதமர். இதில் ஒரு சுவாரஸ்யம் உள்ளது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்

அதன் படி(

நேற்று (3 ஆம் தேதி ) 9 மணிக்கு உரை 9 நிமிடம் பேசினார் 
அடுத்ததாக ஏப்ரல் மாதம் (4 ஆம் )மாதம் 5 ஆம் தேதி ( 4+5=9) 
விளக்கு ஏற்றும் நேரம்   :  இரவு 9 மணி  9 நிமிடம் 
உரை நிகழ்த்திய ஏப்ரல் 3 ஆம் தேதியுடன் ஊரடங்கு பிறப்பித்து 9 நாட்கள் முடிவுற்றது 
விளக்கேற்றும் நாளான நாளையிலிருந்து ஊரடங்கு உத்தரவு முடிய, இடையே இருக்கக்கூடிய நாள் 9 
நாட்கள் 

9 - எண் செவ்வாய் கிரகத்திற்கானது. அன்றைய தினத்தில் விளக்கு ஏற்றி வைக்கும் போது தீங்கு குறையும். அதுமட்டுமல்லாம் 9 கிரகத்திற்கும் விளக்கேற்றி, தீங்கை குறைத்து, எதிர்மறை ஆற்றலை குறைத்து நேர்மறை ஆற்றலை கொடுத்து விடிவுகாலம் பிறக்கும் என்பது நம்பிக்கை