Asianet News TamilAsianet News Tamil

விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்க இப்படி ஒரு காரணமா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!

மக்கள் நலன் கருதி அறிவியல் பின்னணியாகக் கொண்டு நமது முன்னோர்கள் செய்த காரியங்கள் எல்லாம் என்று குருட்டுத்தனமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

why we are disolve vinayagar statue in sea water
Author
Chennai, First Published Jan 29, 2019, 5:12 PM IST

விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்க காரணம் என்ன தெரியுமா ..? 

மக்கள் நலன் கருதி அறிவியல் பின்னணியாகக் கொண்டு நமது முன்னோர்கள் செய்த காரியங்கள் எல்லாம் என்று குருட்டுத்தனமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

கோவில்களில் இருந்து கும்பாபிஷேகம் வரை அனைத்திலும் ஏதோ ஓர் உள்நோக்கத்துடன் தான் நமது முன்னோர்கள் செய்து வைத்திருக்கிறார்கள். ஊர் நடுவில் இருக்கும் கோவில் கலசங்கள் இடிதாங்கிகள் பலன் அளித்து வந்திருக்கிறது. கலசமும் அதனுள் இருக்கும் தானியங்களும் இந்த நல்ல பலனை அளித்து உள்ளது. மேலும் 10 முதல் 12 ஆண்டுகள் முடிந்த உடன் கோவில் கலசங்களின் பவர் சற்று  குறைந்து விடுமாம். அதனால்தான் இந்த இடைப்பட்ட காலம் முடிந்த பிறகு கும்பாபிஷேகம் என்ற பெயரில் அவற்றை மாற்றி வந்துள்ளனர்

why we are disolve vinayagar statue in sea water

அதேபோலதான் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பதும் ஆற்றில் நீர் தங்க வேண்டும் என்றும், நிலத்தடி நீர் ஆதாரம் பெருகவேண்டும் என்பதற்காக செய்யும் செயல்தான் . 

ஆடிப் பெருக்கு

ஆடிப் பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் மணலை கரைத்துக் கொண்டு போய்விடும் அதனால் அவ்விடத்தில் நீர் நிலத்தில் இறங்காமல் ஓடி கடலில் சென்றடைந்துவிடும்.

ஆவணி சதுர்த்தி

அதனால்தான் குறிப்பிட்டு ஆடி மாதம் முடிந்து அதற்கு அடுத்த மாதமான ஆவணி மாத சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடி வந்துள்ளனர். ஆற்றில் நீர் உள்ள இடத்தில் நீர் கீழே பூமியில் உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீர் அதிகரிக்கும்.

களிமண் விநாயகர் சிலைகள் 

அதனால்தான் விநாயகர் சதுர்த்தியின்போது, விநாயகர் சிலைகளை களிமண்ணால் செய்து ஆற்றில் கரைத்து வந்திருக்கின்றனர். ஆனால் ஏன் மூன்று அல்லது ஐந்து நாட்கள் கழித்து ஆற்றில் கரைக்க வேண்டும்? ஈரமான களிமண் சீக்கிரம் கரைந்து வேகத்தோடு அடித்துச் செல்லப்படும். சற்று காய்ந்து களிமண் அதே இடத்தில் படிந்து தங்கிவிடும்.

why we are disolve vinayagar statue in sea water

நிலத்தடி நீர் அதிகரிக்கும் 

இதனால் ஆற்றில் வரும் நீரானது.. பூமியில் நிலத்தடி நீராக மாறி நமக்கான குடிநீர் பிரச்சனையை தீர்க்க..இதனால்தான் நமது முன்னோர்கள் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைத்து வந்துள்ளனர். ஆனால் இன்று ஏன் எதற்கு என்று தெரியாமல் கடலில் வீணாகக் கரைகின்றனர். இதனால் நீர் மாசுபடுகிறது மற்றும் இப்போது சாயம் வண்ணங்கள் சேர்த்து உருவாக்கப்படும் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பதால் நீர் மாசுபடுகிறது. மக்களின் நன்மைக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு காரியம் இன்று அந்த மக்களுக்கு எதிராக அமைகிறது என்பது வருத்தத்தை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாக மாறி உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios