அன்னதானம் வழங்கப்படுவதன் நோக்கம் உயிரினங்களின் பசியினை ஆற்றுவதற்காக தான். நம் முன்னோர்கள் காலத்தில் பேருந்து வசதிகள் கிடையாது.
அன்னதானம் வழங்கப்படுவதன் நோக்கம் உயிரினங்களின் பசியினை ஆற்றுவதற்காக தான். நம் முன்னோர்கள் காலத்தில் பேருந்து வசதிகள் கிடையாது. வெளியூரிலிருந்து கோவில் விசேஷங்கள் சுப தினங்களுக்கு நடைபயணமாக அல்லது மாட்டு வண்டிகளில் கூட்டம் கூட்டமாக மக்கள் வருவது வழக்கம்.

அவ்வாறு நடைபயணமாக வரும் மக்கள் அவரவர் வீட்டிலேயே கட்டுச்சோறு கட்டி எடுத்து வருவர். வரும் வழிகளில் மரநிழலில் அமர்ந்து உடன் வருபவர்களுடன் பகிர்ந்து உண்பர். அவர்கள் கொண்டுவரும் கட்டுச்சோறு ஓரிரு நாட்களில் கெட்டுவிடும். நீண்ட தூரம் இவ்வாறு பயணம் மேற்கொள்ளும்போது சில நாட்கள் உணவின்றியே கோவிலை வந்தடைவர்.

அவ்வாறு களைப்பில் வரும் பக்தர்களை பசியாற்றவே கோவிலில் அன்னதானம் முறை கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஆண்டு முழுவதும் ஓரிரு வேளை மட்டுமே கூழ் கஞ்சி அருந்திவிட்டு நாள் முழுவதும் வயல்காடுகளில் பாடுபடும் மக்கள் ஒருநாளாவது இறைச்சி உண்ண செய்ய வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்டது தான் கெடா விருந்து.
ஆனால் இக்கால மக்கள் வீட்டில் தாங்கள் சமைத்த உணவினை நன்றாக உண்டுவிட்டு, அன்னதானம் மற்றும் விருந்து பற்றி எந்த ஒரு சரியான புரிதலும் இல்லாமல் நம் முன்னோர்கள் காட்டிய மனிதநேயத்தை பின்பற்றாமல் உள்ளனர் என்பது வருத்தமான ஒரு விஷயம்.
