why put flowers in pot for home

 பொதுவாக தற்போது பலரது வீடுகளில் வெண்கல பாத்திரத்திலோ அல்லது மண் பாத்திரத்திலோ, தண்ணீர் ஊற்றி அதில் பல வண்ணத்தில் பூக்கள் போட்டு அலங்கரித்து வைத்திருப்பார்கள். இதற்கான காரணம் பலர், அழகுக்காக தான் என நினைக்கிறார்கள். இதற்கு பின்னால் ஒரு ரகசியமும் உள்ளது. 

இப்படி வெண்கலம் அல்லது மண் பாத்திரங்களில் பூக்கள் போட்டு மிதக்க வைப்பது, சீனர்கள் பயன்பாட்டில் இருந்து தோன்றியது. மேலும் இது ஒரு வாஸ்து பரிகாரமாகும். 

இப்படி நம் வீடுகளில் அல்லது அலுவலகங்களில், செய்தால் வாஸ்து குறைபாடு, கண் திருஷ்டி, மற்றும் நோய் நொடிகள் நீங்கி நமது வீட்டில் செல்வம் பெருகும் என நம்பப்படுகிறது.