நிச்சயம் செய்வதற்கு முன் மணப்பெண்ணுடன் சிறிது நேரம் பேசி அறிந்துகொள்ள கேட்கப்படும் நேரம் போன்றதுதான் அது. பெண்கள் முதல் சந்திப்பிலேயே ஆண்களை நிராகரிப்பதற்கான காரணங்களை சொல்கின்றன்றனர்.

பெண்கள் என்றாலே இனிமையானவர்கள், நேர்மையானவர்கள், குடும்ப பாங்கானவர்கள் என்ற கருத்துக்கள் கொண்டிருந்த ஒருவனை சந்தித்ததாக கூறுகிறார் ஒரு பெண். தான் அவனை நிராகரித்ததற்கு காரணம் தன்னை பெண்ணியவாதி என்று அறிமுகப்படுத்திக் கொண்டானாம். ஆனால் அவனுக்கு பெண்ணியம் குறித்த உண்மையான புரிதல் இல்லை அல்லது போலியாக நடித்துக் கொண்டிருக்கிறான் என்றார்.

புத்திசாலித்தனமாக நகைத்துப் பேசத் தெரிந்த ஒருவன் தங்கள் சந்திப்பின் போது முன்னாள் காதலி குறித்தே பேசிக்கொண்டிருந்ததாகக் கூறுகிறார் மற்றொரு பெண். அவன் முழுமையாக அவளை விட்டு வரவில்லை என்றும் மனக் குழப்பத்தால் பிரிந்ததையும் புரிந்துகொண்டு விலகியதாகக் கூறுகிறார் அவர்.

முத்தமிட்டான்... பிராட் மைண்டட் மற்றும் எதையும் சாதரணமாக எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவன் போல தன்னைக் காட்டிக்கொண்ட ஒருவன், டேட்டிங் முடிந்து பிரியும் நேரத்தில்  திடீரென இறுக்கமாக கட்டிப்பிடித்து, முத்தமிட்டதாகவும், அவனது செயல் இயல்புக்கு மாறாக இருந்ததாகவும் கூறிய பெண் அவனை கன்னத்தில் அறைந்துவிட்டு விலகிவிட்டதாகவும் கூறுகிறார் ஒரு பெண்.

தங்கள் டேட்டிங்கில் மோசமாக அமைந்தது அவனது டேபிள் மேனர்ஸ் என்கிறார் ஒரு பெண் டேட் செய்ய வந்தது போல இல்லாமல் வாயில் இருந்து வழியும் அளவிற்கு உணவுகளை அள்ளி திணித்து கொண்டிருந்ததாகக் கூறுகிறார் அவர். அவன் விட்ட ஏப்பத்தின் சப்தம் ஹோட்டல் வாசல் வரைக்கும் கேட்டிருக்கும் என்ற அவர் விட்டால் போதும் என தப்பி ஓடியதாகக் கூறுகிறார்.

சம்பளம் எத்தனையாக வேண்டுமானாலும் இருக்கட்டும். பணமும், தனது வாழ்க்கை முறை குறித்தும் மட்டுமே பேசிக்கொண்டிருந்தவனை பிடிக்கவில்லை என்கிறார் மற்றொரு பெண் ஆடம்பரமான வாழ்க்கை மீது அவனுக்கு பேரார்வம் இருந்ததே தவிர, தன் மீது இல்லை என்கிறார்.

எத்தனை கோபம் வந்தாலும் நம்மை சுற்றி இருக்கும் நபர்கள் முகம் சுளிக்கும் படி நடந்துக் கொள்ள கூடாது என்று சொல்லும் ஒரு பெண் தங்கள் முதல் டேட்டிங்கின் போது அவன் பணியாட்களை அடிமைகளை போல நடத்தியதாகவும், ஐந்து நிமிடம் உணவு தாமதம் ஆனதற்கே கத்தத் தொடங்கிவிட்டதாகவும் கூறுகிறார்.

சமூக தளங்களில் அவனது பதிவுகளைப் பார்த்து டேட்டிங்கிற்கு ஒப்புக்கொண்டதாகவும், நேரில் பார்த்தபோது அவன் ஒரு வார்த்தை கூட பேசாமல் ஊமைபோல் இருந்ததாகவும் கூறும் மற்றொரு பெண் அவன் பதிவுகள் எல்லாம் காப்பி - பேஸ்ட் வகை என்கிறார்.