மத்தியில் ஆளும் பாஜக மீண்டும் வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் ஏற்பட்டு உள்ளது. காரணம் நாளுக்கு நாள் பிரதமர் மோடிக்கு அதிகரித்துவரும் செல்வாக்கு என்று கூறப்படுகிறது.

வரும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவது பாஜகவா ? அல்லது  காங்கிரசா என கடந்த மாதம் 2-ஆம் தேதி முதல் 22ம் தேதி வரை சுமார் 20 நாட்களாக 31 ஆயிரம் பேர்களில் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கை வெளியாகி உள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு செல்வாக்கு அதிகம் உள்ளதாக தெரியவந்துள்ளது. வலுவான சிறந்த தலைவராக இருக்க ராகுலை காட்டிலும், மோடிக்கே ஆதரவு பெருகி உள்ளதாம்.

நேஷனல் டிரஸ்ட் நடத்திய இந்த கருத்துக் கணிப்பில், 63.4 சதவீத மக்கள் மீண்டும் மோடியே பிரதமராக வரவேண்டும் என்றும் தெரிவித்து உள்ளனர். பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 52.8 சதவீத பேர் மோடிக்கு ஆதரவு தெரிவித்து இருந்துள்ளனர். அதாவது புல்வாமா தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த பதிலடி மூலம் மோடியின் செல்வாக்கு மேலும் உயர்ந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில் நேஷனல் ட்ரஸ்ட் நடத்திய கருத்துக் கணிப்பு நேற்று வெளியானதில் 26.9 சதவீத மக்கள் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்காளம், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து மாநில கட்சிகளுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளதாகவும் குறிப்பாக ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் மட்டும் மோடிக்கு செல்வாக்கு குறிப்பிட்ட அளவிற்கு அதிகரித்து உள்ளதாகவும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

மோடியின் செயல்திறன் மதிப்பீட்டை பொருத்தவரையில் 45.4 சதவீதம் பேர் நன்று என்றும் 21.7 சதவீதம் பேர் பிரமாதமான ஆட்சி என்றும் வெறும் 3.9% பெயர் சுமார் என்றும் கருத்து தெரிவித்துள்ளதாக நேஷனல் டிரஸ்ட் வெளியிட்டு உள்ள கருத்துக்கணிப்பில் பதிவாகி உள்ளது.