Asianet News TamilAsianet News Tamil

யாருக்கு கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா..?

மிகவும் தூய்மையாக இருப்பது நல்லது. இது ஒரு பக்கமிருக்க கொரோனா வைரஸால்  யார் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்ற ஒரு கேள்வி எழுகிறது.

who will  affect very easily by coroana virus
Author
Chennai, First Published Mar 9, 2020, 5:09 PM IST

யாருக்கு கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா..? 

இந்தியாவில் தற்போது  43 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் மத்தியில் ஒருவிதமான பீதி 
காணப்படுகிறது.இந்த நிலையில் யாரும் பயப்பட வேண்டாம் என்றும், தங்களை சுற்றி சுத்தமாக வைத்துக் கொண்டு தாமும் சுத்தமான பழக்கவழக்க முறையை கடைபிடித்து வந்தாலே எந்த நோயும் நம்மை அண்டாது என தெரிவித்து வருகின்றனர் மருத்துவர்கள்.

அந்த வகையில் குறிப்பாக அடிக்கடி கையை கழுவி தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், எக்காரணத்தைக் கொண்டும் அடிக்கடி கைகளை முகத்திற்கு அருகில் கொண்டு செல்வது, கையை அடிக்கடி முகத்தில் வைப்பது, வாயில்,காதில், மூக்கில் வைக்க கூடாது.

who will  affect very easily by coroana virus

காரணம் கொரோனா பொருத்தவரையில் நேரடியாக பரவ கூடியவை. பாதிக்கப்பட்டவரிடம் இருந்து நேரடியாக பரவும். அதாவது பாதிக்கப்பட்டவரை தொட்டாலோ அல்லது அவர் தும்பும் போதோ அல்லது இரும்பும் போதோ... நாம் அருகில் இருந்தாலும் மிக எளிதாக பரவும். இது தவிர்த்து பாதிக்கப்பட்டவரின் உமிழ்நீர் நம் மீது பட்டால் அதில் இருக்கக்கூடிய கொரோனா   வைரஸ் 48 மணி நேரம் வரை உயிர் வாழக் கூடும்.

who will  affect very easily by coroana virus

எனவே மிகவும் தூய்மையாக இருப்பது நல்லது. இது ஒரு பக்கமிருக்க கொரோனா வைரஸால்  யார் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்ற ஒரு கேள்வி எழுகிறது. அப்படி பார்க்கும்போது 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்கள், சுவாச கோளாறு உள்ளவர்கள் இவர்களை மிக எளிதாக தாக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. 

who will  affect very easily by coroana virus

அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்கினால் உயிரழப்பு ஏற்படுமா என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால் அது அப்படி இல்லை .உயிரிழப்பு என்பது மிகவும் குறைவான எண்ணிக்கையே. அதுவும் ஆரம்ப காலகட்டத்தில் சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் காலம் கடந்து பின்னர் மருத்துவரின் பார்வைக்கு கொண்டு செல்வது. இதனால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. எனவே மேற்குறிப்பிட்டவர்கள் சளி இருமல் இருந்தால் உடனடியாக அன்றைய நாளிலேயே மருத்துவரை அணுகவேண்டும் என்றும் முதல் நாளில் அணுகி சிகிச்சை பெற்ற பின் அடுத்த இரண்டு நாட்களுக்குள் எப்படி உள்ளது முன்னேற்றம் உள்ளதா ?அல்லது மீண்டும் அதிகமாக பாதிக்கப்படுகிறது என்பதை புரிந்து அடுத்தடுத்த பரிசோதனைகள் செய்யப்படும். எனவே எது எப்படி இருந்தாலும் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

Follow Us:
Download App:
  • android
  • ios