Asianet News TamilAsianet News Tamil

உலகின் சிறந்த கணிதமேதையாக அறியப்பட்ட சீனிவாச ராமானுஜன் யார்? ஈரோட்டுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு?

கணித மேதை என்றழைக்கப்படும் சீனிவாச ராமானுஜன் எண்களின் கோட்பாட்டிற்கு செய்த பங்களிப்பு இன்றளவும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. 

Who is worlds greatest mathematician Srinivasa Ramanujan? What is his relationship with Erode in Tamil Nadu?
Author
First Published Dec 22, 2022, 12:54 PM IST

கும்பகோணத்தில் உள்ள அரசு கல்லூரியில் சீனிவாச ராமானுஜன் 1903 ஆம் ஆண்டு படித்தார். கல்லூரியில், அவர் கணிதத்தில் அதிக கவனம் செலுத்தியதாலும் மற்ற பாடங்களை புறக்கணித்ததாலும் தேர்வில் தோல்வியடைந்தார். என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவின் தகவலின்படி, சீனிவாச ராமானுஜன் தனது முதல் கட்டுரையை 1911 ஆம் ஆண்டு இந்திய கணித சங்கத்தின் இதழில் வெளியிட்டார்.

உதவித்தொகை பெற்று 1914 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் படிப்பை மேற்கொள்ள சென்றார். அங்கு அவர் பிரிட்டன்  கணிதவியலாளர் காட்ஃப்ரே ஹெச் ஹார்டியிடம் பயிற்சி பெற்றார். இவரது கணித கோட்பாடுகள இன்றும் உதாரணமாக கூறப்பட்டு வருகிறது. ரீமான் தொடர், நீள்வட்ட ஒருங்கிணைப்புகள், ஹைப்பர்ஜியோமெட்ரிக் தொடர்கள், ஜீட்டா செயல்பாட்டு சமன்பாடுகள் ஆகியவற்றை அவர் தனது சொந்த நுட்பத்தைப் பயன்படுத்தி கண்டறிந்தார். இவை ராமானுஜன் கூட்டுத்தொகை என்று அழைக்கப்படுகிறது. 

Year Ender 2022: 2022 ஆம் ஆண்டில் மக்கள் அதிகம் பயணித்த டாப் 5 இடங்கள் ஒரு பார்வை!!

ராமானுஜன் 1919 ஆம் ஆண்டில் இந்தியா திரும்பினார். ஒரு வருடம் கழித்து, அவர் தனது 32 வயதில் கும்பகோணத்தில் இறந்தார்.

ஸ்ரீனிவாச ராமானுஜனைக் கௌரவிக்கும் வகையில் டிசம்ர் 22 ஆம் தேதி தேசிய கணித தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் சிறந்த கணிதவியலாளர் சீனிவாச ராமானுஜன் எண்களின் மேஜிசியன் என்றும் அழைக்கப்படுகிறார், அவரது தனித்திறமையால் பல சிறந்த ஆராய்ச்சிகளை செய்தார். சீனிவாச ராமானுஜன் தனது 32 வயதில் கணிதத்தின் 3900 கோட்பாடுகளை உருவாக்கி இருந்தார். இவை சமன்பாடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. ராமானுஜன் தனது காலத்தை விட தொலைநோக்கு பார்வையில் அவரது சிந்தனைகளை கொண்டு இருந்தார். 1919 ஆம் ஆண்டிலேயே, பிரபஞ்சத்தின் மிகப்பெரிய புதிரான கருந்துளையை தீர்க்கக்கூடிய  Mock Theta-வை கண்டுபிடித்தார்.

பெரிய கணிதவியலாளர்கள் மணிக்கணக்கில் எடுத்துக் கொள்ளும் கணித சூத்திரங்களை தீர்ப்பதற்கான காலத்தை ராமானுஜன் நிமிடங்களில் நிரூபித்துக் காட்டினார். ராமானுஜனின் குழந்தைப் பருவம் போராட்டங்கள் நிறைந்தது, 1889 ஆம் ஆண்டில், அவரது உடன்பிறந்தவர்கள் அனைவரும் பெரியம்மை நோயால் இறந்தனர். ராமானுஜனின் தந்தை புடவைக் கடையில் குமாஸ்தாவாகவும், தாய் இல்லத்தரசியாகவும் இருந்தனர். 1889 ஆம் ஆண்டில்,  அவருடன் பிறந்தவர்கள் அனைவரும் பெரியம்மை நோயால் இறந்துவிட, ராமானுஜன் குணமடைந்தார். ராமானுஜன் பிறந்து சுமார் மூன்று வருடங்கள் பேசாமல் இருந்துள்ளார். இதனால் அவர் ஊமையாக பிர்ந்துவிட்டாரோ என்று குடும்ப உறுப்பினர்கள்  வருந்தினர். 1887 ஆம் ஆண்டில், டிசம்பர் 22 அன்று ஈரோட்டில் பிறந்தார் சீனிவாச ராமானுஜன்.

கர்நாடகாவில் கட்டாயம் செல்ல வேண்டிய 10 இடங்களும் அதன் சிறப்பம்சங்களும்!!

தனது வீட்டுச் செலவுக்களுக்கு டியூஷன் கற்றுக் கொடுத்தார். 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, பிஏ மாணவர்களுக்கு டியூஷன் சொல்லிக்கொடுத்தார். 13 வயதிற்குள், அவர் முக்கோணவியல் கோட்பாட்டை கண்டறிந்தார். 
கணிதத்தில் நிபுணராக இருந்த ராமானுஜன் அரசு கலைக் கல்லூரியில் உதவித்தொகை பெற்று பெற்று படிக்கும் வாய்ப்பை பெற்றார். 

விலை அதிகம் காரணமாக பதிவேட்டில் தினமும் இவரால் கணக்குகளை பதிய முடியவில்லை. ஆனாலும், பதிவேடு ஒன்றை வைத்து இருந்தார். சிலேட்டில்தான் கணக்குகளை போட்டுப் பார்ப்பார். பின்னர் பதிவேட்டில் பதிந்து வைத்துக் கொள்வார். வேலை தேடிச் செல்லும் இடங்களில் அந்த பதிவேட்டை காண்பித்தார். ஆனால், அந்த பதிவேட்டை யாரும் நம்பவில்லை. அலட்சியப்படுத்தப்பட்டார். 

பிரிட்டன் பேராசிரியர் ஹார்டி தான் ராமானுஜனை உலகின் தலைசிறந்த கணிதவியலாளராக அடையாளம் காட்டினார். 1913 ஆம் ஆண்டு அவரை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு வருமாறு ஹார்டி அழைப்பு விடுத்தார். ஆனால், 1919 ஆம் ஆண்டில், கல்லீரல் அமீபியாசிஸ் என்ற நோயால் ராமானுஜன் இந்தியாவுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டது. இந்தியா திரும்பிய பிறகு, அவர் காசநோயால் பாதிக்கப்பட்டு 1920 ஏப்ரல் 26 அன்று தனது 32 வயதில் இறந்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios