who are all more prone to get diabetes mellitus

நீரிழிவு நோய் யாருக்கு வர வாய்ப்பு தெரியுமா ?

உலக முழுவதும் உள்ள மக்கள் தொகையில் 24 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு கூறுகிறது.

நீரிழிவு நோய் யாருக்கு வர வாய்ப்பு

முந்தைய தலைமுறையில் நீரிழிவு நோய் உடையவர்கள்

அதிக கார்போஹைட்ரேட், அதிக கொழுப்பு சத்து மிகுந்த உணவை உண்பவர்கள்

டிரைகிளிசரைடு அதிகம் உள்ளவர்கள், குறைந்த எச்.டி.எல். உடையவர்கள்

நீரிழிவு நோயின் முந்தைய கட்டத்தில் இருப்பவர்கள் ஆகியோருக்கு டி2டிஎம் டைப்-2 நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு அதிகம்.

கபதோ‌ஷத்தை அதிகப்படுத்தும் உணவு முறை, வாழ்க்கை முறை

மன அழுத்தம், பயம், துயரம் போன்ற உளவியல் காரணங்கள்.

மேற்சொன்ன காரணங்களால் நீரிழிவு நோய் வரலாம்.

பால், தயிர் மற்றும் அவற்றாலான உணவு பொருட்களை அதிக அளவில் எடுத்துக் கொள்வது

புதிதாக விளைந்த அரிசி மற்றும் தானியங்களை உண்ணல்

கரும்பு, கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை அதிகம் பயன்படுத்துதல்

கார்போ ஹைட்ரேட் மிகுந்திருக்கும் பொருட்களை அதிகம் சாப்பிடுதல்

அதிகமாக இனிப்பு வகைகளை எடுத்துக் கொள்ளல் நீரில், சதுப்பு நிலத்தில் வாழும் உயிரினங்களை அதிகம் உண்பது. (மிகவும் (ஹெவி) - செரிமானத்துக்கு கடினமான) சரிவிகிதத்தில் அமையாத உணவுகளை உண்பது.

மேற்சொன்ன பொருட்களின் அதிக பயன்பாட்டால் நீரிழிவு நோய் வரக்கூடும்.

சிறுநீரில் வாதம் அதிகரித்திருப்பதற்கான அறிகுறிகள்.

இதயம் பளுவாக இருப்பதாக உணரல்

குளிர்ந்த பொருட்கள் மீதும், குளிர்ந்த சூழல் மீதும் விருப்பம்

உடலில் அதிக எண்ணெய் பசை இருத்தல்

மேற்சொன்ன தன்மைகள் காணப்பட்டால் நீரிழிவு வரலாம்.

அடிக்கடி உணவு உண்ண தோன்றுவது

தேன் போன்று இனிப்பும், துவர்ப்பும் கலந்த சுவையில் சிறுநீர் இருத்தல்

நம் முன்னோர் 20 வகையான நீரிழிவு நோய் பற்றி கூ றுகின்றனர்.

இதில் 10 வகை கபதோ‌ஷ மாறுபாட்டால் வருவது இதற்கு பரம்பரை காரணமில்லை என்றால் முழுவதும் குணப்படுத்தலாம்.

பித்ததோ‌ஷ மாறுபாட்டால் வரும் 6 வகையையும் கட்டுப்பாட்டில் வைக்கலாம். பக்கவிளைவை தடுக்கலாம்.

வாததோ‌ஷ மாறுபாட்டால் வரும் 4 வகையை குணப்படுத்த முடியாது. வாழ்நாள் முழுக்க கட்டுப் பாட்டில் வைக்கலாம்.என்று சொல்கின்றனர்.

நவீன மருத்துவம் வகை-1. வகை-2. கர்ப்பகால நீரிழிவு என்று நீரிழிவு நோயை வகைப்படுத்துகின்றது. சில சமையங்களில்

வகை-1 என்ற வகையில் இன்சுலின் சுரப்பதில்லை உடலே உடலுக்கு எதிரான சில வினைகளைப் புரிகிறது. இன்சுலின் சுரக்கும் இடமான கணையத்தின் பீட்டா செல்களின் அழிவு காரணமாக இன்சுலின் சுரப்பதில்லை. ஆகவே ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.

இன்சுலின் போதுமாக அளவு சுரப்பதில்லை அல்லது சரிவரப்பயன்படுவதில்லை. முன்பு வயதானவர்களுக்கு மட்டும் வந்தது இப்போது பருவ வயதினரையும், சிறு குழந்தைகளையும் கூடத் தாக்குகிறது.

அதிக உணவு, அதிக தூக்கம், கொழுப்புசத்து அதிகம் உள்ள உணவுகள், அதிக இனிப்பு, அதிக மது, உடல் எடை அதிகமாக இருத்தல், சோம்பலான வாழ்க்கை முறை, ஆகியன வகை-2 நீரிழிவு நோய்க்கு காரணங்களாக கூறப்படுகின்றன.

மகளிர் கருவுறும் சமயத்தில் இது வருகிறது. இது குழந்தை பிறந்த பின் மறையலாம். அல்லது சில ஆண்டுகள் கழிந்த பின் மீண்டும் வரலாம். பிறந்த குழந்தைக்கும் நீரிழிவு நோய் வர வாய்ப்புள்ளது.

கருவுறுவதற்கு முன் சிகிக்சை மேற்கொள்வதன் மூலம் அதை தவிர்க்கலாம். இல்லாவிடில் பிறக்குமுன் குழந்தை அதிக எடை கூடுதல், பிறக்கும்போது மூச்சு விட சிரமம், குழந்தை பருவத்தில் அதிக பருமனாதல் ஆகியன நேரலாம். குழந்தை பெரியதாக இருந்தால் சிசேரியன்தான் ஒரே வழி. அதுதவிர இதயம் சிறுநீரக கண்கள் நரம்புகள் பாதிக்கப்படலாம்.

இந்த வகைதவிர கணையத்தில் வரும் பாதிப்புகள், அறுவை சிகிச்சை, தொடர்மருந்துகள், தொற்றுநோய் ஆகியவை காரணமாக நீரிழிவு வரலாம்.

இந்த அனைத்து தகவலையும் மருத்துவர் விஜயாபிரியா அவர்கள் தெரிவித்துள்ளார்.